;
Athirady Tamil News

தென்கொரியா – வடகொரியா அதிபர்கள் சந்திப்புக்கு டிரம்ப் வாழ்த்து..!!

0

விரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா – வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசும் உச்சி மாநாடு இன்று நடைபெற்று வருகிறது.

இரு நாடுகளின் எல்லையையொட்டி தென்கொரிய பகுதியில் உள்ள பன்முஞ்சோமில் நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வற்காக வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் அன் தனது நாட்டு எல்லையை கடந்து அங்கு சென்றுள்ளார்.

கடந்த 1953-ம் ஆண்டில் கொரியா போர் முடிந்த பின்னர் வடகொரியா தலைவர் ஒருவர், தென்கொரியாவுக்கு செல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் 9 பேர் அடங்கிய உயர்நிலை குழுவினரும் சென்றுள்ளனர்.

இந்நிலையில், வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன் – தென்கொரியாவின் அதிபர் மூன் ஜே சந்தித்துப் பேசும் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இன்று வெளியிட்டுள்ள பதிவில், ‘மிக வீரியமான அணு ஆயுத சோதனைகள், ஏவுகணை சோதனைகளுக்கு பிறகு தென்கொரியா-வடகொரியா இடையே வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு நடைபெறுகிறது.

நல்ல காரியங்கள் நடைபெறுகின்றன. ஆனால், காலம்தான் இதுபற்றி சொல்ல வேண்டும்’ என்று தனது குறும்புத்தனமான சந்தேகத்தையும் தெரிவித்துள்ளார். #NorthKorea #southKorea #donaldTrump

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × four =

*