;
Athirady Tamil News

தேசிய நல்லிணக்கத்தை முன்கொண்டு செல்வதற்கு பாடசாலை சிறந்த தளம்: ஜனாதிபதி தெரிவிப்பு..!! (படங்கள்)

0

தேசிய நல்லிணக்கச் செய்தியை சமூகத்திற்கு கொண்டு செல்வதற்கு பாடசாலை சிறந்ததோர் தளமாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் ஸாஹிரா கல்லூரியிலும் மத்திய மகா வித்தியாலயத்திலும் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மூன்றுமாடி கட்டடத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் இன்று (சனிக்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “அனைத்து இனங்களையும் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகளின் ஊடாக தேசிய நல்லிணக்கம் குறித்து சமூகத்திற்கு சிறந்த செய்தியை வழங்க முடியும். தேசிய ஐக்கியத்தை கட்டியெழுப்புவதற்கு பாடசாலை கல்வியினூடாக பாரிய பங்களிப்பை செய்ய முடியும்.

ஒரு பாடசாலைக்கு அதிகளவு மாணவர்களை உள்வாங்குவதன் மூலம் அப்பாடசாலையின் நிர்வாகத்திலும் மாணவர்களின் புறச் செயற்பாடுகளிலும் வளங்களை பெற்றுக்கொடுப்பதிலும் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து தேசிய கல்விக்கொள்கையை வகுக்கின்றபோது கவனத்திற் கொள்ளவேண்டியது அவசியமாகும்.

அபிவிருத்தியடைந்த நாடுகளைவிட, இலவசக் கல்விக்காக எமது நாட்டில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளை உரிய முறையில் முகாமைத்துவம் செய்து முழு தேசத்திற்கும் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொடுப்பதற்காக பாடுபட வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும்” எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வடக்கு, வடமத்திய பிரதான சங்க நாயக்க தேரர் அநுராதபுரம் சம்போதி விகராதிபதி சங்கைக்குரிய நுகத்தென்னே பஞ்ஞானந்த நாயக்க தேரர், அமைச்சர்களான துமிந்த திசாநாயக்க, சந்திராணி பண்டார, பி.ஹெரிசன், கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாரச்சி, ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 5 =

*