;
Athirady Tamil News

மருந்துகள் தொடர்பில் பிரித்தானியா மக்களுக்கு முக்கியமான தகவல்..!!

0

இரண்டு மில்லியன் பிரித்தானியர்கள் பயன்படுத்தும் மருந்துகள் Dementia போன்ற மூளை தொடர்பான பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடியவை என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மன அழுத்தம், சிறுநீர்ப்பை பிரச்சினைகள் மற்றும் பார்க்கின்சன் போன்ற பிரச்சினைகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளில் சில 30 சதவிகித அதிக ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவை என ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

Anticholinergics என்று அழைக்கப்படும் மருந்துகள் முதியவர்களுக்கு தலை சுற்றி விழுதல், குழப்பத்தை ஏற்படுத்துதல் மற்றும் ஞாபக மறதி பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடியவை என ஏற்கனவே தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போதைய ஆய்வு ஒன்று குறைந்தது ஒரு ஆண்டு தொடர்ந்து எடுத்துக் கொண்டால், இம்மருந்துகள் dementia என்னும் பிரச்சினையை ஏற்படுத்தும் என கண்டறிந்துள்ளது.

நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள 850,000பேரில் சுமார் 20,000பேரின் dementia பிரச்சினைக்கு Anticholinergics காரணமாக இருந்திருக்கலாம் என்று தற்போது சந்தேகம் எழுந்துள்ளது.

ஆனால் Anticholinergicsதான் பிரச்சினைக்கு காரணம் என்று நிரூபிக்கப்படவில்லை என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதே நேரத்தில் இந்த மருந்துகளைத் தங்கள் நோயாளிகளுக்கு பரிந்துரைக்கும் மருத்துவர்கள் அவற்றின் நீண்டகால பக்க விளைவுகளைக் கருத்தில் கொள்ளவேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சாதாரணமாக மனிதர்களுக்கு dementia ஏற்படுவதற்கு 10 சதவிகித வாய்ப்புள்ளது என்றால் Anticholinergics எடுத்துக்கொள்வதால் dementia ஏற்படுவதற்கான அபாயம் 13 சதவிகிதம் அதிகரிக்கிறது என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த ஆய்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரித்தானியாவில் அல்சீமர் ஆய்வுகளை மேற்கொள்ளும் Dr Carol Routledge, இதுபோன்ற செய்திகளைக் கேள்விப்படுவதால், தொடர்ந்து எடுத்துக்கொண்டிருக்கும் மருத்துகளை திடீரென்று நிறுத்த வேண்டாம் என்றும் சந்தேகங்கள் ஏற்படும் பட்சத்தில் பொது மருத்துவரைக் கலந்தாலோசிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight + two =

*