;
Athirady Tamil News

காவிரி மேலாண்மை வாரிய வழக்கு: மேலும் 2 வாரம் அவகாசம் கோரிய மத்திய அரசு மனு திடீர் வாபஸ்..!! (வீடியோ)

0

காவிரி விவகாரத்தில் 2 வாரம் கேட்ட கால அவகாசத்தை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை செயல்படுத்த செயல் திட்டத்தை 6 வார காலத்திற்குள் மத்திய அரசு ஏற்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. மேலும் தீர்ப்பை நடைமுறைப்படுத்த 3 மாதம் அவகாசமும் கேட்டது.அதேசமயம் தீர்ப்பை அமல்படுத்த தவறிய மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. விசாரித்த சுப்ரீம் கோர்ட், மே 3-ம் தேதிக்குள் மத்திய அரசு வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இந்த காலக்கெடு முடிய இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், மத்திய அரசு சார்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு செயல் திட்டத்தை உருவாக்க அளிக்கப்பட்ட கால அவகாசம் போதவில்லை என்றும், மேலும் 2 வாரம் அவகாசம் தேவை என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் காவிரி விவகாரத்தில் 2 வாரம் கேட்ட கால அவகாசத்தை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது. தலைமை வக்கீல் அறிவுறுத்தல் பேரில் மனுவை மத்திய அரசு வாபஸ் பெற்றதாக தகவல் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × five =

*