;
Athirady Tamil News

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மே 8-ந்தேதி போராட்டம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அழைப்பு..!!

0

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து உள்ளது. இது அத்தியாவசிய பொருட்களின் விலையிலும் மிகப்பெரிய ஏற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே இந்த விலை உயர்வை திரும்ப பெறுமாறு அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்த விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்தும், விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் நாடு முழுவதும் அடுத்த மாதம் (மே) 8-ந்தேதி போராட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக தங்கள் கட்சிக்குழுக்களுக்கு அந்த கட்சியின் பொலிட்பீரோ அமைப்பு கடிதம் அனுப்பியுள்ளது.

இது குறித்து அந்த கட்சி வெளியிட்ட அறிக்கையில், ‘நாட்டின் மிகப்பெரிய கார்பரேட் நிறுவனங்களுக்கு மத்திய அரசு கோடிக்கணக்கான தொகைக்கு வரி விலக்கு அளிக்கிறது. ஆனால் பெட்ரோல், டீசல் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. எனவே பெட்ரோல், டீசல் மீதான சுங்க வரியை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டம் நடத்த வேண்டியது அவசியமாகிறது. இதில் பிற ஜனநாயக மற்றும் மக்கள் ஆதரவு அமைப்புகளும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்’ என கூறப்பட்டு உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × four =

*