;
Athirady Tamil News

யாழ். சிறைச்சாலை வாகனம் மீது தாக்குதல் – ஒருவர் கைது..!!

0

யாழ். சிறைச்சாலை வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத நபர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ். சிறைச்சாலை வாகனம் மீது தாக்குதல் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் இளைஞனை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த தாக்குதல் யாழ். பிரதம தபால் நிலையத்தின் முன்பாக இடம்பெற்றுள்ளதுடன், தாக்குதலில் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

சம்பவத்தில் படுகாயம் அடைந்த உத்தியோகத்தர் தற்போது சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × two =

*