;
Athirady Tamil News

ரணிலின் கோட்டைக்குள் புகுந்த மர்மநபர்கள்..!!

0

அலரி மாளிகைக்குள் புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த பெறுமதியான பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சிங்கள ஊடகம் ஒன்று இன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் மேலதிக செயலாளர் சமன் அத்தாவுதஹெட்டியின் ஊடக பிரிவின் பொறுப்பின் கீழிருந்த பொருட்களே இவ்வாறு களவாடப்பட்டுள்ளன.

ஊடக பிரிவின் பொறுப்பிலிருந்த அரசாங்கத்தின் சொத்துக்களான லெப்டொப் வகைகள் உட்பட பல பெறுமதியான பொருட்கள் காணாமல் போயுள்ளதாக குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

கணினி மற்றும் கமரா பொருட்கள் உட்பட அரசாங்க சொத்துக்களை பட்டியலிட்டு அத்தாவுதஹெட்டியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர் அந்தப் பொருட்களை பொறுப்பேற்று அலரி மாளிகையின் அறையொன்றில் பாதுகாத்துள்ளார். பின்னர் குறித்த களஞ்சிய அறையின் திறப்பினை ஊடக பிரிவில் இணைந்து பணியாற்றும் ஷியாமலி காரியவசம் பெற்றுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் அலரி மாளிகையில் சேவை செய்யும் அதிகாரிக்கு ஏற்பட்ட தேவைக்காக கணினி ஒன்றை எடுக்கச் செல்லும் போதே பொருட்கள் காணாமல் போன விடயம் தெரியவந்துள்ளது.

அங்கிருந்த பொருட்களை பரிசோதத்த போது பல விலை உயர்ந்த பொருட்கள் காணாமல் போனமை தெரியவந்துள்ளது. பின்னர் சோதித்து பார்த்த போது பொருட்கள் காணாமல் போயுள்ளமை தெரியவந்துள்ளது.

அதற்கமைய இந்த சம்பவம் தொடர்பில் அத்தாவுதஹெட்டியிடம் அறிவிக்கப்பட்ட நிலையில், பிரதி பொலிஸ் மா அதிபர் ஹரிஸ்சந்திர விக்ரமசிங்கவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் தகவல் வெளியாகத வகையில் விசாரணை ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக கூறப்பட்ட போதிலும், இதுவரையிலும் எவ்வித உள்ளக விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை என குறித்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × two =

*