;
Athirady Tamil News

சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பேசியது என்ன? மோடி விளக்கம்..!!

0

டோக்லாம் எல்லையில் சீனப்படைகளுக்கும் இந்தியப் படைகளுக்கும் நீடித்த மோதல் காரணமாக இருநாட்டு உறவுகளில் விரிசல் ஏற்பட்டது. அந்த இடைவெளியை சரி செய்யும் விதமாக, சீன அதிபரின் அழைப்பை ஏற்ற இந்திய பிரதமர் மோடி சீனாவில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வுஹான் நகரில் நடைபெறும் 2 நாள் மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்ற மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசினார். அப்போது டோக்லாம் எல்லைப் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினர்.

இந்த நிலையில், சீன அதிபருடனான சந்திப்பு பற்றி சீன நாட்டின் வெய்போ வலைத்தளத்தில் பிரதமர் மோடி தனது கருத்தினை பதிவிட்டுள்ளார்.

அதில், ‘‘வுஹானில் அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் இருவரும் விரிவான மற்றும் பலன் தரும் பேச்சுவார்த்தையினை நடத்தினோம். இந்தியா மற்றும் சீனா இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதற்கான கருத்துகளை பரிமாறிக் கொண்டோம்.

சீன வரலாறு மற்றும் கலாசாரத்தின் இல்லமாக திகழும் ஹுபெய் மாகாண மியூசியத்தில் என்னுடன் அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொண்டு பார்வையிட்டதற்காக அவருக்கு நன்றி” என மோடி தெரிவித்து உள்ளார்.

சீனாவின் பிரபல சமூக வலைத்தளமான வெய்போவில் 1 லட்சத்து 83 ஆயிரத்து 112 பேர் மோடியை பின்தொடர்கின்றனர்.

இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் மாநாடு தொடங்கியது. மோடியும் ஜி ஜின்பிங்கும் கிழக்கு ஏரிக்கரையில் நடந்து சென்றபடியே உரையாடினர். #Modi #XiJinping #summitinIndia

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 + eight =

*