;
Athirady Tamil News

ஊடகவியலாளர்களுக்கு நீதிகேட்டு கவனயீர்ப்புப் போராட்டம்..!! (படங்கள்)

0

ஊடகவியலாளர் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளால் கொல்லப்பட்ட – காணாமல் ஆக்கப்பட்ட – பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகேட்டு வடகிழக்கு ஊடக அமைப்புக்களின் ஒன்றிணைந்து இன்று (28) சனிக்கிழமை மட்டக்களப்பு நகரில் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

வடக்கு – கிழக்கில் போர் இடம்பெற்ற சூழலில் 41 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

அரச படைகளாலும், துணைப்படைகளாலும் அரங்கேற்றப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான ஒடுக்குமுறைக்கு நீதிகேட்டு தர்மரத்தினம் சிவராம்(தராகி) நினைவு நாளில் வடக்கு – கிழக்கின் எட்டு மாவட்டங்களையும் சேர்ந்த ஊடகவியலாளர்கள் ஒன்றுகூடி இன்று மட்டக்களப்பில் நகரில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five + twenty =

*