கார் விபத்தில் மணமகன் உட்பட 6 பேர் பரிதாப பலி..!!

மத்தியப்பிரதேசம் மாநிலம் சாட்னா மாவட்டத்தில் உள்ள நரோரா கிராமத்திற்கு அருகே நேற்று இரவு திருமண வீட்டார் சென்ற கார் மீது வேகமாக வந்த லாரி மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த மணமகன், 4 குழந்தைகள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.
காரானது திருமணம் முடிந்த பிறகு அமிலியா கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த போது விபத்து நடந்துள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஜெசிபி உதவியுடன் காரையும், லாரியையும் பிரித்து இறந்தவர்களின் உடலை எடுத்தனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்துக்குள்ளான லாரியின் டிரைவர் தலைமறைவாகியுள்ளனர். அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். திருமணம் ஆன ஒரே நாளில் மணமகன் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews