;
Athirady Tamil News

உ.பி.யில் திருமணம் முடிந்து திரும்பும்போது மணமகளை சுட்டுக்கொன்று நகை-பணம் கொள்ளை..!!

0

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரைச் சேர்ந்தவர் ஷாஜப். இவருக்கும் காசியாபாத்தைச் சேர்ந்த பக்ரானா என்ற பெண்ணுக்கும் நேற்று திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்ததும் மணமக்கள் ஒரு காரிலும், உறவினர்கள் வேறு சில கார்களிலும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். வழியில் பர்தாபூர் என்ற இடத்தில் காரை நிறுத்தி சாலையோர ஓட்டலில் சாப்பிட்டனர். அதன்பிறகு மீண்டும் பயணத்தை தொடர்ந்தனர்.

அப்போது காரில் வந்த கொள்ளை கும்பல் திருமண கோஷ்டியினர் சென்ற காரை பின் தொடர்ந்து விரட்டி மறித்தது. துப்பாக்கி முனையில் அவர்களிடம் நகை-பணத்தை கொள்ளையடித்தனர்.

கும்பலில் சிலர் காரில் இருந்த மணமகளை மிரட்டி நகையை பறிக்க முயன்றனர். மணமகள் மறுத்ததால் அவர்கள் துப்பாக்கியால் சுட்டு நகை- பணத்தை பறித்தனர்.

அதன்பிறகு மணமகளை கீழே தள்ளிவிட்டு அந்த காரில் தப்பி சென்றுவிட்டனர்.

தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். குண்டு காயத்துடன் உயிருக்கு போராடிய மணமகளை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவளை பரிசோதனை செய்த டாக்டர்கள் மணமகள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் திருமண கோஷ்டியினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தப்பி ஓடிய கொள்ளை கும்பலை போலீசார் வாகன சோதனை நடத்தி தேடி வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 − one =

*