;
Athirady Tamil News

சிவனொளிபாதமலைக்கு சென்ற 7பேர் கைது..!!

0

சிவனொளிபாதமலைக்கு கஞ்சா பொதியுடன் சென்ற 7 பேரை ஹற்றன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று (வெள்ளிக்கிழமை) சிவனொளிபாதமலைக்கு வெவ்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்தவரிடமிருந்து 6900 மில்லி கிராம் கஞ்சா பொதிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இவர்களை இனங்காண்பதற்கு ‘கோரா’ என்ற மோப்ப நாயின் உதவியும் பெறப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த சந்தேகநபர்களை ஹற்றன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஹற்றன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − two =

*