;
Athirady Tamil News

ஆனையிறவு முகாம்: முக்கியத்துவமும், போரும்!! : ‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-16) -வி.சிவலிங்கம்

0

ஆனையிறவு முகாம் முக்கியத்துவமும், போரும்!! : ‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-16) -வி.சிவலிங்கம்

அன்பார்ந்த வாசகர்களே!

கடந்த இதழில் ஊர் காவல் படையினர் கிராமங்களின் பாதுகாப்பிற்காக எவ்வாறு இணைக்கப்பட்டார்கள்? அக் காவல் படையினர் சிறிய சம்பளத்திற்காக எவ்வித பயிற்சியும் இல்லாமல் ஏன் இணைந்தார்கள்? வறுமையில் வாழ்ந்த அம் மக்களின் சிறிய சம்பளத் தொகையில் பொலீஸ் நிலைய அதிகாரிகள் தமக்கென அக் கொடுப்பனவுகளைச் சுருட்டிய செய்திகள் எனச் சில விபரங்களைப் பார்த்தோம்.

இம் முறை இவ் ஆயுதப் போராட்ட வரலாற்றில் இலங்கை ராணுவம் மிகப் பாரிய தோல்வியைச் சந்தித்தது ஆனையிறவு முகாம் தாக்குதலாகும்.

இப் பின்னணியை வரலாற்று நிகழ்வுகளின் பின்னணியில் ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன எவ்வாறு விபரிக்கிறார்? என்பதைத் தொடர்ந்து பார்க்கலாம்.

சிலாவத்துறை ராணுவ முகாமைத் தாக்கிய புலிகள் அதனைத் தொடர்ந்து பொதுமக்களையும் தாக்கினர். 1991ம் ஆண்டு மார்ச் மாதம் 24ம் திகதி அம்பாறைப் பிரதேசத்திலுள்ள அக்கரைப்பற்றிலிருந்த மீன் சந்தையில் குண்டுகளை வீசி அதில் 9 பேர் மரணித்ததோடு, 32 பேர் காயமடைந்தனர்.

பின்னர் அதே ஆண்டு ஏப்ரல் 14ம் திகதியாகிய புத்தாண்டு தினத்தில் எத்திமலை கிராமத்தினைத் தாக்கி 17 பொதுமக்களும், அதே மாதம் 20ம் திகதி நியென்டல என்ற கிராமத்தில் 22 பொதுமக்களுமாக மரணங்கள் தினமும் அதிகரித்துச் சென்றன.

main-qimg-82fb371f0db5fa10cf72af7b697e558c-c ஆனையிறவு முகாம் முக்கியத்துவமும், போரும்!! : ‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-16) -வி.சிவலிங்கம் ஆனையிறவு முகாம் முக்கியத்துவமும், போரும்!! : ‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-16) -வி.சிவலிங்கம் main qimg 82fb371f0db5fa10cf72af7b697e558c c

இக் காலப் பகுதியில் கடற்புலிகளின் தாக்குதல்களும் தொடர்ந்தன. பருத்தித்துறைக் கடற் பிராந்தியத்தில் தரித்து நின்ற ‘அப்கீதா’(Abheetha) என்ற கடற்படைக் கப்பல் தற்கொலைப் போராளிகளால் சேதமாக்கப்பட்டது.

இலங்கையில் நிகழ்ந்த இப் பயங்கரவாத நிகழ்வுகள் அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் அவதானத்தைப் பெற்றிருந்தன.

ஜனாதிபதி ஜே ஆர் இற்கும், பிரதமர் காந்திக்குமிடையே காணப்பட்ட கசப்பான உணர்வுகளும் நிலமைகளை மேலும் மோசமடையச் செய்தன. 1977ம் ஆண்டு இலங்கையின் பொதுத் தேர்தலுக்கு முன்பதாக இந்தியாவில் பொதுத் தேர்தல் இடம்பெற்றது.

அத் தேர்தலில் இந்திரா காந்தி பெரும் தோல்வி அடைந்தார்.

1977 இல் இலங்கையில் இடம்பெற்ற தேர்தலின் போது இந்திரா காந்தியை அவமானப்படுத்தும் விதத்தில் பிரச்சாரங்கள் இடம்பெற்றன. அப்போது ஜனாதிபதி பதவிக்கு திருமதி. சிறீமாவோ பண்டாரநாயக்க போட்டியிடக் காத்திருந்தார்.

இந்திரா காந்திக்கு நேர்ந்த கதியே சிறீமாவோ பண்டாரநாயக்காவிற்கும் நேரும் என பிரச்சாரங்கள் தொடர்ந்தன. அப்போது நான் ஓர் மாணவனாக இருந்தேன்.

ஜே ஆரின் கூட்டங்கள் பலவற்றில் இந்திரா காந்திக்கும், சிறீமாவோ பண்டார நாயக்கவிற்கும் இடையேயான நட்பறவை இழிவுபடுத்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

srima ஆனையிறவு முகாம் முக்கியத்துவமும், போரும்!! : ‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-16) -வி.சிவலிங்கம் ஆனையிறவு முகாம் முக்கியத்துவமும், போரும்!! : ‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-16) -வி.சிவலிங்கம் srima

தேர்தலின் முடிவில் சிறீமாவோ தோற்கடிக்கப்பட்டது மட்டுமல்லாமல் அவரது சிவில் உரிமையையும் ஜே ஆர் அரசு பறித்தது. இவை காந்தியின் குடும்பத்தினரிடையே கவலையை ஏற்படுத்தியிருந்தன.

அது மட்டுமல்லாமல் பிரதமர் காந்தியின் தோல்வியைத் தொடர்ந்து மொரார்ஜி தேசாய் தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சி பதவிக்கு வந்ததால் ஜே ஆர் – மொரார்ஜி உறவு வளர்ந்தது.இச் செயல்களும் காந்தியின் மனதில் வெறுப்பை அதிகரிக்கக் காரணமாக அமைந்தன.

சிறிது காலத்தின் பின்னர் இந்திரா காந்தி மீண்டும் பிரதமரானார். இலங்கை – இந்திய உறவுகள் கசப்பான நிலையை நோக்கிச் சென்றன. நான் மாணவனாக இருந்த வேளையில் இந்திரா காந்தி மீது மிகவும் மதிப்பு வைத்திருந்தேன்.

ஆனாலும் நான் ராணுவத்தில் இணைந்த பின்னர் அச் சிந்தனைகளில் மாற்றங்கள் ஏற்பட்டன. இதற்குக் காரணம் அவர் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு வழங்கியமையாகும்.

ராணுவத்தின் வடமராட்சித் தாக்குதலின் போது இலங்கை வான் எல்லையை இந்திய விமானப்படையினர் மீறிய போது நான் மிகவும் வெறுப்படைந்தேன்.

சீக்கியர்களின் புனித பொற் கோவிலைத் தாக்கியது கொடுமையானது எனக் கருதினேன். சீக்கியர்களின் தீவிரவாதியான ‘காலிஸ்தான்’ பிரிவினை கோரிய பிந்திரன்வாலே கொலை செய்யப்பட்ட விதம் வெறுப்பைத் தந்தது.

அச் சம்பவத்தின் பின்னர் 2011ம் ஆண்டு பயிற்சிக்காக இந்திய தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் இணைந்திருந்த வேளை அப் பொற் கோவிலைப் பார்க்க நேர்ந்தது. மிகவும் அழகான, பிரமாண்டமான கோவில் அதுவாகும்.

Getting-sick-of-the-balbir-seo-postings-lets-forget-about-him-as-hes-now-finished.-Moving-on ஆனையிறவு முகாம் முக்கியத்துவமும், போரும்!! : ‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-16) -வி.சிவலிங்கம் ஆனையிறவு முகாம் முக்கியத்துவமும், போரும்!! : ‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-16) -வி.சிவலிங்கம் Getting sick of the balbir seo postings lets forget about him as hes now finishedBhindranwale

பிந்திரன்வாலே பெரும் நாயகனாக சீக்கியர்களால் கருதப்பட்டார். ஆலயத்தின் உள்ளே உள்ள பாரிய காட்சியகத்தில் அம் மக்களின் பெருமை மிக்க வரலாற்றின் அடையாளங்கள், போராளிகளின் உருவப் படங்கள் என வைக்கப்பட்டிருந்தன.

இந்திய ராணுவத்தால் பிந்திரன்வாலே கொல்லப்பட்டிருந்த போதிலும் அவரை ஓர் நாயகனாகக் கௌரவப்படுத்தி பாரிய உருவப் படத்தை வரைந்து அங்கு வைத்திருப்பதைப் பார்த்து ஆச்சரியமும், வியப்பும் அடைந்தேன்.

அவ் உருவப்படத்தின் கீழே அவரை அறிமுகம் செய்யும் விதத்தில் ‘சீக்கிய மக்களின் உரிமைக்காக இந்திய ராணுவத்திற்கு எதிராகப் போராடித் தனது வாழ்வைத் தியாகம் செய்த சீக்கிய இனத்தின் நாயகன்’ எனப் பொறிக்கப்பட்டிருந்தது.

பயிற்சி முடிந்து திரும்புகையில் பிந்திரன்வாலே தேசிய நாயகன் எனப் பொறிக்கப்பட்டிருப்பதை எனது சக இந்திய அதிகாரிகளிடம் வினவியபோது சிரிப்பு மட்டுமே பதிலாகக் கிடைத்தது.

பிந்திரன்டவாலேயின் வளர்ச்சிக்கு இந்திரா காந்தியே உதவியதாக பல இந்தியர்கள் கருதுகின்றனர். ஆனால் காலப் போக்கில் அவரைக் காந்தியால் கட்டுப்படுத்த முடியவில்லை.

இதன் விளைவாகவே அவரைத் தாக்க வேண்டியேற்பட்டது. பொற்கோவிலும் தவிர்க்க முடியாமல் தாக்கப்பட்டது என்கின்றனர். உண்மை எதுவெனப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஈற்றில் சீக்கியர் ஒருவராலேயே அவரும் கொல்லப்பட்டார்.

இந்திரா காந்தியின் திடீர் மரணம் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணித் தலைவர் அமிர்தலிங்கம், பிரபாகரன் என்போருக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

indira_gandhi_assassinated ஆனையிறவு முகாம் முக்கியத்துவமும், போரும்!! : ‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-16) -வி.சிவலிங்கம் ஆனையிறவு முகாம் முக்கியத்துவமும், போரும்!! : ‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-16) -வி.சிவலிங்கம் indira gandhi assassinatedindira Gandhi murder

இலங்கை தொடர்பாக இந்தியாவின் அணுகுமுறை எவ்வாறு அமையலாம்? என்ற கேள்வி பலரின் மத்தியில் எழுந்தது. அவரது மரணத்தைத் தொடர்ந்து அவரது மகன் ராஜிவ் காந்தி பிரதமரானார்.

இலங்கை தொடர்பாக ராஜிவ் காந்தியின் அணுகுமுறை மாறுபட்டிருந்ததாக நான் கருதுகிறேன். இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் அதிகம் தலையிடாது மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் அவரது செயற்பாடுகள் அமைந்திருந்தன.

இருப்பினும் தமிழ் மக்களின் உத்தியோகப் பற்றற்ற தலைவராக பிரபாகரனே உள்ளதாக அவர் கருதினார். அப்போதைய தமிழ்நாட்டு முதலமைச்சர் எம். ஜி. ராமச்சந்திரன் அவ்வாறான எண்ணத்தைத் தோற்றுவிக்கக் காரணமாக இருந்துள்ளார்.

விடுதலைப்புலிகள் தொடர்பாக ராஜிவ் காந்திக்கு சிறிது நல்லெண்ணம் இருந்த போதிலும் அவர் இலங்கையில் அமைதி ஏற்படவேண்டுமென எண்ணினார்.

images ஆனையிறவு முகாம் முக்கியத்துவமும், போரும்!! : ‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-16) -வி.சிவலிங்கம் ஆனையிறவு முகாம் முக்கியத்துவமும், போரும்!! : ‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-16) -வி.சிவலிங்கம் images3LTTE leader V. Prabakaran and  Tamil Nadu Chief Minister M.G. Ramachandran 

தனது சமாதான முயற்சிகளைப் பிரபாகரன் ஏற்காத போது அழுத்தங்களைப் பிரயோகித்துச் சமாதானத்தை ஏற்படுத்த முயன்றார். இறுதியாக இலங்கை – இந்திய ஒப்பந்தத்தினை இரு அரசுகளும் தயாரித்த போது பிரபாகரனின் விருப்பம் எதுவாக இருந்தாலும் சமாதானத்தை ஏற்படுத்துதல் அவசியம் என்பதால் பிரபாகரனை அச் சமன்பாட்டிலிருந்து விலக்கி வைத்தார்.

இவ்வாறான இறுக்கமான முடிவுகள் இலங்கைப் பொதுமக்களிடையே எதிர்ப்பையும், அதன் விளைவாக கடற்படை அதிகாரி அணிவகுப்பின் போது அவரைத் தாக்க முயற்சித்த சம்பவமாகவும் அமைந்தது.

விடுதலைப்புலிகளின் கடந்த காலச் செயற்பாடுகளை நன்கு அறிந்திருந்ததால் இந்திய சமாதானப் படையினருக்கும், புலிகளுக்குமிடையே மோதல் ஏற்படலாம் எனத் தெரிந்திருந்தும் அவர் புலிகள் சம்பந்தமாக மென்மைப் போக்கையே ஆரம்பத்தில் கைக்கொண்டார். ஆனாலும் பிற் காலத்தில் கடுமையாகவே நடந்துகொண்டார்.

ராஜிவ் காந்தி எடுத்த முடிவுகள் குறித்தும், தம்மீது இலங்கை – இந்திய ஒப்பந்தத்தினை ஏற்கும்படி வழங்கிய அழுத்தங்கள் குறித்தும், பின்னர் சமாதானப்படையினர் புலிகளைத் தாக்கியதும் பிரபாகரனைக் கொதிப்படைய வைத்தமையால் பழிவாங்கும் முடிவை அவர் எடுத்திருந்தார்.

இதன் காரணமாக தனது நெருங்கிய சகாவும், உளவுத்துறைப் பொறுப்பாளருமான பொட்டு அம்மானிடம் அப் பொறுப்பை ஒப்படைத்திருந்தார்.

21-1432195976-rajiv-assassination1 ஆனையிறவு முகாம் முக்கியத்துவமும், போரும்!! : ‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-16) -வி.சிவலிங்கம் ஆனையிறவு முகாம் முக்கியத்துவமும், போரும்!! : ‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-16) -வி.சிவலிங்கம் 21 1432195976 rajiv assassination1

1991ம் ஆண்டு மே மாதம் 21ம் திகதி தென் இந்தியாவிலுள்ள சிறீபெரம்புதூர் என்ற இடத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்யச் சென்றிருந்த போது ‘தானு’ என்ற தற்கொலைப் பெண் போராளி மாலை போடுவதாகப் பாசாங்கு செய்து அவரை ஸ்தலத்திலேயே கொன்றார்.

இங்குள்ள முக்கிய அம்சம் என்னவெனில் ராஜிவ் காந்தியைக் கொன்ற ‘தானு’ என்ற பெண் போராளி இந்திய ராணுவத்திடம் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ் வன் செயலின் விளைவாக இந்திய மக்களின் புலிகளுக்கான ஆதரவு சரியத் தொடங்கியது. இருப்பினும் நிலமைகள் வேறு விதமாகவும் அமைந்தன. தமிழ் நாட்டின் முதலமைச்சராக மூவர் பதவி வகித்திருந்தனர்.

எம். ஜி. ராமச்சந்திரன், மு. கருணாநிதி, ஜெயலலிதா ஜெயராம் என்போராகும். அரசியல் போட்டி காரணமாக இலங்கைப் பிரச்சனையை தமது அரசியல் பலத்திற்குச் சாதகமாக இவர்கள் பயன்படுத்தினர்.

இலங்கைத் தமிழர் பிரச்சனை அவர்களின் வாக்குப் பலத்தை அதிகரிக்க உதவியது. சிறிய அமைப்புகளின் முக்கியஸ்தர்களான நெடுமாறன், வை கோ போன்றவர்களும் இதே ஊதுகுழலையே வாசித்தனர்.

இரண்டு முக்கிய தலைவர்களான இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி ஆகியோரின் படுகொலைகள் இவர்களுக்கு விழிப்புணர்வைக் கொடுத்திருக்க வேண்டும். ஆனாலும் அவர்கள் அதனைப் புரிந்து கொண்டுள்ளதாக தெரியவில்லை.

4046238 ஆனையிறவு முகாம் முக்கியத்துவமும், போரும்!! : ‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-16) -வி.சிவலிங்கம் ஆனையிறவு முகாம் முக்கியத்துவமும், போரும்!! : ‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-16) -வி.சிவலிங்கம் 4046238ஆனையிறவு முகாம்  தாக்குதல் ஒத்திகை

ஆனையிறவு முகாம் மிக நீண்ட காலமாகவே உள்ளது. இதுவே யாழ் குடாநாட்டினை பெரு நிலப்பரப்புடன் இணைக்கும் குறுகிய நிலப் பகுதியாகும்.

வட பகுதிப் புகையிரதப் பாதையும், யு 9 பிரதான வீதியும் ஒரு சேர நெருங்கிச் செல்லும் குறுகிய பாதையாகும். இதனை இலங்கையின் கழுத்துப் பகுதி எனலாம். யு 9 பிரதான வீதியின் மேற்குப் புறத்தில் பரந்த உப்பு விளையும் கடற்பரப்பு உள்ளது.

1983ம் ஆண்டு தேர்தல் கடமைக்காக யாழ் குடாநாட்டிற்குச் சென்றிருந்த போது அந்த இடம் ஓர் போர்க் களமாக மாறி பல ஆயிரக் கணக்கான உயிர்களைப் பலி கொள்ளும் என நான் எண்ணியிருக்கவில்லை.

1984ம் ஆண்டு ஆனையிறவு முகாமில் பணிபுரியச் சென்றிருந்தேன். அம் முகாமின் முகப்பில் நிரந்தரமான வீதித் தடுப்பு போட்டிருக்கும். அங்கு நிரந்தர ராணுவக் காவல் இருக்கும்.

நாம் எமக்கு அதிக வேலைகள் இல்லாத போது அந்த வீதித் தடுப்பிற்கு அருகில் சென்று அங்குள்ள நடவடிக்கைகளை அவதானிப்போம். இளைஞர்கள் எவராவது கடந்து செல்லும்போது எம்மைச் சற்று ஆச்சரியத்துடன் யாராவது நோக்கும்போது அவர்களை அழைத்துக் கேள்விகள் கேட்போம்.

elipant-1 ஆனையிறவு முகாம் முக்கியத்துவமும், போரும்!! : ‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-16) -வி.சிவலிங்கம் ஆனையிறவு முகாம் முக்கியத்துவமும், போரும்!! : ‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-16) -வி.சிவலிங்கம் elipant 1

ஆனையிறவு இராணுவ முகாம் தாக்குதல் ஒத்திகை

‘யாழ்தேவி’ புகையிரதத்திற்கான பாதுகாப்பையும் நாம் வழங்குவதால் அந்த அனுபவங்கள் என்றும் இனிமையானவை.

ஈழப் போர் விரிவடைந்து சென்ற போது ஆனையிறவு முகாமும் பிரதான போர்க் களமாக மாறியது. அந்த இடம் பூகோள அடிப்படையில் பிரதான புள்ளியாக இருந்தமையால் ராணுவத்திற்கும், புலிகளுக்கும் முக்கியத்துவம் பெற்றதாக அமைந்தது.

eps_map1 ஆனையிறவு முகாம் முக்கியத்துவமும், போரும்!! : ‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-16) -வி.சிவலிங்கம் ஆனையிறவு முகாம் முக்கியத்துவமும், போரும்!! : ‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-16) -வி.சிவலிங்கம் eps map1ஆனையிறவு

 

யாழ் குடாநாட்டின் பிரதான நுழை வாயில் என்பதால் அதனைக் கட்டுப்படுத்துவது என்பது கௌரவப் பிரச்சனையாகவும் அமைந்தது.

1991ம் ஆண்டு காலத்தில் அம் முகாமிற்கான ஆபத்து மிகவும் அதிகரித்திருந்தது. மாங்குளம் முகாம் தாக்கப்பட்டதன் பின்னர் இந்த முகாம் மேலும் விஸ்தரிக்கப்பட்டது.

உலகத்தில் பரந்து வாழும் புலம்பெயர் தமிழர்களின் இதயத்தில் யாழ் குடாநாடு மிகவும் நெருக்கமாக உள்ளது. இலங்கையில் வாழும் எந்தத் தமிழராகிலும் யாழ்ப்பாணம் என்பது வரலாற்றாலும், சிந்தனையாலும் பிணைக்கப்பட்டுள்ளார்.

பாரம்பரிய ‘ தேச வழமைச் சட்டம்’ என்பது யாழ் குடாநாட்டு நிலப் பரப்பினை அம் மக்களுடன் மிகவும் இணைத்து வைத்துள்ளது. எனவே ஆனையிறவு என்பது குடாநாட்டின் பாதுகாப்பு வாயில் என்பதால் தமிழர்களுக்கு அப் பகுதி மிகவும் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

( மேலும் தொடரும் )

மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன
தொகுப்பு : வி. சிவலிங்கம்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 + 3 =

*