;
Athirady Tamil News

சிங்கப்பூரிலிருந்து நியூயார்கிற்கு 20 மணி நேரம் தான்! பயணிகளை வியக்க வைக்கும் விமான நிறுவனம்..!!

0

உலகிலே அதிக நேரம் இடையில் நிற்காமல் பயணிக்கும் விமான சேவையை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

சிங்கப்பூரில் இருந்து 15,323 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள அமெரிக்காவின் நியூயார்க்கிற்கு இடைநில்லாமல் 20 மணி நேரம் பயணிக்கும் விமானசேவையை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் துவங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதற்காக ஏர்பஸ் ஏ350-900 என்ற புதிய விமானம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விமானத்தின் பெட்ரோல் டேங்க்கின் கொள்ளவு 1 லட்சத்து 65 லிட்டராக அதிகரிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் நியூசிலாந்தின் ஆக்லாந்தில் இருந்து 14, 535 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள கத்தாரின் தோகாவுக்கு 18 மணி நேரம் 20 நிமிடம் பறந்த விமானமே இடைநில்லாது அதிக நேரம் பறந்த சாதனைக்கு உரியதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − 16 =

*