;
Athirady Tamil News

சமாதானத்தை நிலைநாட்ட அனைவரும் அணி திரளுங்கள்..!!

0

புத்தபிரான் புனித காலடி எடுத்து வைத்த இப்பூமியில் போர் மோதல்கள் மற்றும் துயர்கள் அற்ற வகையில், அனைத்தின சமூகங்களுக்கும் சமமான உரிமைகள் மற்றும் நீதி நியாயம் என்பன கிடைக்கப் பெறுகின்ற நிலையான சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு நாம் அனைவரும் அணி திரளுதல் வேண்டும். இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

அவர் அனுப்பி வைத்த வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,

புத்தபெருமானின் வாழ்க்கைப் பயணத்தில் மிக முக்கியத்துவமிக்க மூன்று நிகழ்வுகள் இடம்பெற்ற வெசாக் தினத்தை கொண்டாடும் பௌத்த சமய பக்தர்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கக் கிடைத்தமையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.
எவரும் பிறப்பிலே உயர்ந்தவராகவோ தாழ்ந்தவராகவோ காணப்படுவதில்லை என்பதனை உறுதிசெய்து, மனித வர்க்கத்தினர் அனைவரையும் சமமாக மதித்து, வாழ வேண்டும்.

சமூகங்களுக்கிடையே காணப்பட்ட பல்வேறு ஏற்றத் தாழ்வுகள் மற்றும் பிரிவினைகள் என்பவற்றினை அகற்றி பாரிய சமூக மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கு புத்தபிரான் அவர்களால் முடிந்துள்ளது.

சமாதானம் மற்றும் ஒத்துழைப்புடன் கூடிய சகவாழ்வின் ஒளியின் ஊடாக இப்புனித வெசாக் தினத்தில் எமது தேசத்தை மெருகூட்டுவோம்.
உங்கள் அனைவருக்கும் புனித வெசாக் தின வாழ்த்துக்கள் உரித்தாகுக.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − 2 =

*