;
Athirady Tamil News

சீனாவை கதிகலங்க வைத்த கத்திக்குத்து: பலியான மாணவ, மாணவிகள் எண்ணிக்கை 9 ஆக உயர்வு..!!

0

சீனாவில் ஷான்சி மாகாணம், மிஜி கவுண்டியில் உள்ள நடுநிலைப்பள்ளிக்கூடத்தின் வெளியே நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி மாலை 6.10 மணிக்கு ஒரு மர்ம நபர் கையில் கத்தியுடன் வந்தார். அவர் தன் கண் எதிரே தென்பட்ட மாணவ, மாணவிகளை சரமாரியாக கத்தியால் குத்தி சாய்த்தார். இது அங்கு உள்ள மக்களை கதிகலங்க வைத்தது.

உடனடியாக போலீசாரும், மீட்பு படையினரும் அங்கு விரைந்தனர்.

இந்த சம்பவத்தில் 7 குழந்தைகள் பலியானதாகவும், படுகாயம் அடைந்த மாணவ, மாணவிகளை மீட்பு படையினர் மீட்டு ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும் முதல் கட்ட தகவல்கள் வெளிவந்தன.

இந்த நிலையில் கத்திக்குத்தில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்து உள்ளதாகவும், அவர்களில் 7 பேர் மாணவிகள் என்றும், 2 பேர் மாணவர்கள் என்றும் நேற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் 12-15 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது.

இந்த கத்திக்குத்து சம்பவத்தை நடத்திய 28 வயதான ஜாவோ என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் தாக்குதல் நடந்த பள்ளிக்கூடத்தின் முன்னாள் மாணவர் என்றும் தெரிய வந்து உள்ளது.

அவரிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில், தான் அந்தப் பள்ளியில் படித்த காலத்தில் தன்னோடு படித்த மாணவ, மாணவிகள் மீது வெறுப்பு ஏற்பட்டதாகவும், அதன் அடிப்படையில்தான் இப்போது அந்தப் பள்ளியில் கத்திக்குத்து சம்பவத்தை நடத்தியதாகவும் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 4 =

*