;
Athirady Tamil News

கணவனுடன் தகாத உறவு கொண்ட பெண் சுட்டுக் கொலை: தற்கொலை செய்த மனைவி ..!!

0

அமெரிக்காவில் கணவனுடன் தகாத உறவு கொண்ட பெண்ணை கொலை செய்து விட்டு, மனைவியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா மாகாணத்தில் மார்க் ஜெரார்ட் மற்றும் ஜென்னிர் ஜெரார்ட் தம்பதியினர் வசித்து வருகின்றனர், மார்க் ஜெரார்ட் மற்றும் மெரிடித் எனும் வேறொறு பெண்ணுக்கும் கள்ள உறவு இருந்துள்ளது.

ஜென்னிர் ஜெரார்ட் கணவரும் மெரிடித்தும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றிய போது அவர்களுக்குள் இந்த தவறான உறவு ஏற்பட்டுள்ளது.

இந்த விவாகரம் ஜென்னிர் ஜெரார்ட்க்கு தெரியவந்ததும் தனது கணவர் தனக்கு இழைத்த துரோகத்தை கண்டு மிகவும் வருந்தியுள்ளார்.

அதன் பிறகு தனது கணவரிடம் தவறான உறவை வைத்திருந்த மெரிடித்யை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்

அதன்படி மெரிடித்தின் வீட்டின் கண்ணாடி ஜன்னலை உடைத்து அவருக்கு தெரியாமல் ஜென்னிர் ஜெரார்ட் அவரது வீட்டினுள் நுழைந்துள்ளார்.

தாம் வீட்டிற்குள் இருப்பது மெரிடித்க்கு தெரியக் கூடாது என்பதால் உடைந்த கண்ணாடிகளை சுத்தம் செய்த பின்னர் விட்டில் ஓர் இடத்தில் ஒளிந்து கொண்டார்.

மெரிடித் வழக்கம் போல வீட்டிற்கு வந்த பின்னர் நேரே சமையல் அறைக்கு சென்றுள்ளார். அந்நேரம் பார்த்து மெரிடித் தலையில் துப்பாக்கியால் சுட்டு கொன்ற பின்னர் தானும் சுட்டுக்கொண்டு ஜென்னிர் தற்கொலை செய்துகொண்டார்.

துப்பாக்கி சத்தம் கேட்டு அங்கு இருந்தவர்கள் பொலிஸாருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் வந்து சடலங்களை கைப்பற்றிய போது, இந்த கொலை குறித்து அவர் தீட்டிய திட்டம் அனைத்தும் ஜென்னிர் செல்போனில் மெயில் மற்றும் மெசேஜ்களில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × five =

*