;
Athirady Tamil News

‘வந்தே மாதரம்’ பாடலை பாதியில் நிறுத்த சொன்னதாக சர்ச்சையில் சிக்கினார் ராகுல் காந்தி..!!

0

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் பிரசார கூட்டம், பந்த்வால் என்ற இடத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் தொடக்கத்தில் பள்ளி குழந்தைகளை பொதுக்கூட்ட ஏற்பாட்டாளர்கள் ‘வந்தே மாதரம்’ தேசபக்தி பாடலை பாட வைத்து உள்ளனர்.

அப்போது ராகுல்காந்தி, மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் கே.சி.வேணுகோபாலிடம் தன் கைக்கெடிகாரத்தை காட்டி, இன்னும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டிய நிலையில் நேரம் ஆகி விட்டதை சுட்டிக்காட்டியதாகவும், அவர் உடனே குழந்தைகளை ‘வந்தே மாதரம்’ பாடலை பாதியிலேயே நிறுத்த வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து பா.ஜனதா மூத்த தலைவர் முரளிதரராவ், பெங்களூருவில் நேற்று நிருபர்களிடம் பேசுகையில் சாடினார்.

“காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவர்களும் நீண்ட காலமாக சுதந்திர இயக்கத்தின் மரபுகளை இழந்து, சுதந்திர போராட்ட வீரர்களின் மரபுகளை மறந்து விட்டனர். நேற்று இரவு (நேற்று முன்தினம் இரவு) பந்த்வாலில் நடந்த நிகழ்ச்சி, இதை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்து உள்ளது. ராகுல் காந்தி தேசிய பாடலை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்தையும் அவமதித்து விட்டார். அவர் நாட்டிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். #VandeMataram #RahulGandhi #Tamilnews

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve + four =

*