;
Athirady Tamil News

ஹபாயா தொடர்பில் கவனமாகப் பேசவும்- சம்பந்தன்..!!

0

திரு­கோ­ண­மலை சிறி சண்­முகா இந்து மக­ளிர் கல்­லூ­ரிக்­கென உல­கம் ஏற்­றுக்­கொண்ட ஒரு மரபு உண்டு. அந்த மர­பு­க­ளுக்கு ஏற்ப கரு­மங்­கள் நடக்க வேண்­டும். அவற்றை மீறா­மல் பேச்சு நடத்­தப்­பட்டு உரிய முடி­வு­கள் எடுக்­கப்­பட வேண்­டும்.”

இவ்­வாறு எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பின் தலை­வ­ரும் திரு­கோ­ண­ மலை மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார்.

குறித்த கல்­லூ­ரி­யில் முஸ்­லிம் ஆசி­ரி­யை­மார் ‘ஹபாயா’ அணி­வது தொடர்­பில் எழுந்­துள்ள சர்ச்­சை­கள் குறித்து கேட்­ட­போதே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்ட அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

“திரு­கோ­ண­மலை சிறி சண்­முகா இந்து மக­ளிர் பாட­சாலை சுமார் 150 வருட பாரம்­ப­ரிய வர­லா­றைக் கொண்­டது. அந்த நாள்­க­ளில் திரு­கோ­ண­ம­லை­யில் உள்ள இந்து மக­ளி­ருக்கு ஒரு பாட­சாலை தேவை­யென சைவ இந்­துப் பெரி­யார்­க­ளும் நலன் விரும்­பி­க­ளும் இணைந்து ஆரம்­பிக்­கப்­பட்ட தனி­யார் பாட­சாலை இது.

எனவே, அதற்­கென உள்ள சம்­பி­ர­தா­யங்­கள் மதிக்­கப்­ப­ட­வேண்­டும் எனப் பெற்­றோ­ரும் பாட­சாலை சமூ­க­மும் விரும்­பு­கின்­றது. அந்­தப் பாட­சா­லைக்­கென உல­கத்­தால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட ஒரு பாரம்­ப­ரி­யம் மர­பு­க­ளுக்கு ஏற்ப செயற்­பட வேண்­டும். இந்த விட­யங்­கள் பேசப்­பட்டு நிதா­ன­மான முடி­வு­கள் எடுக்­கப்­பட வேண்­டும். எத்­த­னையோ சகாப்­தங்­க­ளாக இருக்­கும் நடை­மு­றையை திடீ­ரென மாற்­றி­விட முடி­யாது. எனவே, பேசி சில விட­யங்­க­ளுக்­குத் தீர்வை நாம் காண வேண்­டும்” – என்­றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − four =

*