;
Athirady Tamil News

வவுனியாவில் நகரசபை தலைவராக பதவியேற்றவுடன், “வாகனத்துக்கு அடம்பிடிக்கும்” ஈ.பி.ஆர்.எல்.எப் கௌதமன்…

0

வவுனியாவில் நகரசபை தலைவராக பதவியேற்றவுடன், “வாகனத்துக்கு அடம்பிடிக்கும்” ஈ.பி.ஆர்.எல்.எப் கௌதமன்… (படங்கள் இணைப்பு)

வவுனியா கோவில்குளத்தில்அமைந்துள்ள இளங்கோ அடிகளாரின் தூபியடியில் நகர சபையின் செயலாளர் திரு தயாபரன் தலைமையில், இளங்கோ அடிகளாரின் நினைவுதின அனுஷ்டிப்பு. இன்றையதினம் நடைபெற்றது.

இவ் நிகழ்வில் சிலையினை திறந்து வைத்து, எமது மாவட்டத்தில் தமிழையும் சைவத்தையும் செயல் வடிவத்தில் நிலைநிறுத்த காரணமான, முன்னாள் உப நகர பிதாவும், தற்போதைய நகர சபை உறுப்பினருமான கௌரவ க.சந்திரகுலசிங்கம் மோகன், தற்போதைய உப நகர பிதா கௌரவ சு.குமாரசாமி, நகர சபை உறுப்பினர் கௌரவ சு.காண்டீபன் ஆகியோருடன் செட்டிகுளம் பிரதேச சபை உறுப்பினர் கௌரவ சு.ஜெகதீஸ்வரன் சிவம், ஆட்டோ சங்க தலைவர் திரு.ரவீந்திரன், திரு தமிழருவி சிவகுமார், சிவன் ஆலய தலைவர் திரு நவம், தமிழ்விருட்சம் தலைவர் திரு.சந்திரகுமார், புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் இளைஞரணியை சேர்ந்த சதீஸ், லம்போதரன், சஜீவ்நாத், பிரதீபன், கெர்சோன் ஆகியோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் உரையாற்றிய வவுனியா நகர சபையின் செயலாளர் திரு தயாபரன் உரையாற்றுகையில், “வவுனியா நகரை அபிவிருத்தி செய்ய வேண்டுமென” வலியுறுத்தியதுடன், “அற்ப விடயங்களுக்காக ஆசைப்பட்டு இருப்பதையும் இழக்க கூடாது” என்றார்.

வவுனியா நகரசபை செயலாளர் தெரிவிக்கையில் “நகரசபை தவிசாளர் அவர்கள் பதவிக்கு வந்தவுடன், உடனே எனது வாகனம் எங்கே? என்று கேட்டார். அதற்கு செயலாளர் ஆகிய நானும் “நகரசபைக்கு ஒரு வாகனம் தான் உள்ளது” என்று சொல்லி, “அந்த வாகனத்தில் தான் நான் செல்லுகிறேன் ஆனால் நீங்கள் கொண்டு போங்கள்” என்று சொன்னேன்.

அப்பொழுது நகரசபை தவிசாளர் கௌதமன் “என்னிடம் கார் உள்ளது நான் அதை பாவிக்கிறேன், இப்போதைக்கு நீங்கள் இதனை பாவியுங்கள்” என்று சொல்லும் போது, செயலாளர் ஆகிய நான் “பிரச்சினை ஒன்றும் இல்லை நீங்கள் அரச வாகனத்தை கொண்டு செல்லுங்கள்” என்று சொல்லி ஒப்படைத்தேன்.

இதையேன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால், “பதவிக்கு வந்தவுடன், யாரும் தன்னிலை மறந்து செயல்படக் கூடாது” என்பதுக்கு தான் எனவும் குறிப்பிட்டார்.

இதேவேளை ஈ.பி.ஆர்.எல்.எப், அமைப்பை சேர்ந்த, வவுனியா நகரசபை தலைவர் கௌரவ இ.கௌதமன் வவுனியா நகரசபை தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்து இருந்த போதிலும், விகிதாசார பட்டியலில் தெரிவானதும், அவரே இப்போது நகரசபை தலைவராக தேசியக் கட்சிகளுடன் கூட்டிணைந்து வெற்றி ஈட்டி உள்ளதும்,

இவர் மட்டுமல்ல ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழர் விடுதலைக் கூட்டணி அமைப்பில் போட்டியிட்ட அனைவரும் தோல்வி அடைந்ததுடன், இவர்களில் மூவரும் “தேசிய பட்டியல்” மூலமே தெரிவானவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து ஊடகப்பிரியன்–

விடுதலைப் புலிகளின் பாணியிலேயே, வவுனியா நகரசபையை கைப்பற்றியது, ஈ.பி.ஆர்.எல்.எவ்! -நடந்தது என்ன?

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 + fourteen =

*