;
Athirady Tamil News

வவுனியாவில் யுவதியை துஷ்பிரயோகத்திற்கு முயற்சித்த சிறுவன்..!!

0

கடந்த நான்கு நாட்களுக்கு முன் வவுனியா உக்கிளாங்குளம் பகுதியில் மாலை 6.30 மணியளவில் 20வயதுடைய யுவதி ஒருவர் தனது பிளசர் ரக மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார். இதன் போது இருள் சூழ்ந்த நேரம் என்பதை மனதில் கொண்ட 17வயதுடைய சிறுவன் தனது மோட்டார் சைக்கிளில் குறித்த யுவதியை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருக்கும் போதே யுவதியின் மார்பங்களை பிடித்து துஷ்பிரயோகத்திற்கு முயன்றுள்ளார்.

சுதாகரித்து கொண்ட யுவதி சத்தம் போட்டு கூக்குரலிடவும் குறித்த சிறுவன் தப்பித்து ஓடியுள்ளான். இதன் போது யுவதியின் கூக்குரல் கேட்டு வந்த இளைஞர்கள் சிலர் சிறுவனின் மோட்டார் சைக்கிளை பின் தொடர்ந்து துறத்தி மடக்கி பிடித்துள்ளனர்

மடக்கி பிடித்த போது தான் அவன் ஒரு சிறுவன் என்று தெரிய வந்ததுடன் மதுபோதையில் இருந்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

குறித்த சிறுவனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சிறுவளை இளைஞர்கள் விடுவித்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven + 11 =

*