;
Athirady Tamil News

திருநெல்வேலி அரசடி ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தீர்த்த திருவிழா..!! (படங்கள்)

0

திருநெல்வேலி அரசடி ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தீர்த்த திருவிழா சித்திரா பௌர்ணமியான இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

காலை 07 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து உள்வீதியுளா வந்த அம்மன் காலை 8.30 மணியளவில் ஆலய தீர்த்த கிணற்றில் தீர்த்தமாடி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.

சிவகாமசுந்தரி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் கடந்த 15ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. அதனை தொடர்ந்து கடந்த 15 நாட்கள் மகோற்சவ திருவிழாக்கள் நடைபெற்று , இன்றைய தினம் தீர்த்த திருவிழா நடைபெற்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 12 =

*