;
Athirady Tamil News

பீகாரில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழப்பு..!!

0

பீகார் மாநிலம் பாகல்பூர் பகுதியில் கோசி ஆறு அமைந்துள்ளது. அந்த ஆற்றில் இன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்த படகு ஒன்று திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படகில் பயணம் செய்த 8 பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். படகு கவிழ்ந்து ஆற்றில் தத்தளித்த 7 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். தொடர்ந்து அங்கு மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 1 =

*