;
Athirady Tamil News

ம.பி.யில் வெவ்வேறு சாலை விபத்துகளில் ஒரே நாளில் 21 பேர் பலி..!!

0

மத்தியப்பிரதேசம் மாநிலம் ஜபால்பூர் மாவாட்டத்திற்குட்பட்ட மான்கேடி கிராமத்தில் டிரக் ஒன்று சிமெண்ட் மூட்டைகளை ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டிரக் அருகில் இருந்த மரத்தில் மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் டிரக்கில் மேல்பகுதியில் அமர்ந்து பயணம் செய்தவர்கள் மீது சிமெண்ட் மூட்டைகள் விழுந்தன. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் சிமெண்ட் மூட்டையின் அடியில் சிக்கியிருந்தவர்களை மீட்கப்போராடினர். இருப்பினும் இந்த விபத்தில் 8 பேர் உடல் நசுங்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல மண்ட்சாவுர் பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையை ஒட்டியிருந்த சிறிய பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 24 பேர் காயமடைந்தனர்.

சத்னா மாவட்டத்தில் நடந்த இரு விபத்துகளில் ஐந்து பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் இன்று ஒரே நாளில் நிகழ்ந்த நான்கு வெவ்வேறு சாலை விபத்துகளில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 + twelve =

*