;
Athirady Tamil News

பேராசிரியை நிர்மலா தேவியிடம் நடைபெற்ற 2ம் கட்ட விசாரணை நிறைவு..!!

0

மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் வகையில் செல்போனில் பேசியதாக அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. கவர்னரால் நியமிக்கப்பட்ட ஒருநபர் விசாரணை அதிகாரியான சந்தானமும் விசாரணை நடத்தி வருகிறார்.

சி.பி.சி.ஐ.டி. போலீசார் நிர்மலா தேவியை காவலில் எடுத்து விசாரித்தபோது, மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் தூண்டுதலின்பேரிலேயே மாணவிகளிடம் பேசியதாக தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் பேராசிரியர் முருகன் கைது செய்யப்பட்டார். கருப்பசாமி மதுரை கோர்ட்டில் சரண் அடைந்தார். அவர்கள் 2 பேரும் சாத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது, சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்காக காவலில் எடுத்தனர்.

இந்நிலையில், பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் இரண்டாம் கட்ட விசாரணை நிறைவடைந்து விட்டதாக விசாரணை அதிகாரி சந்தானம் தெரிவித்துள்ளார். இரண்டாம் கட்ட விசாரணை அறிக்கை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 2 =

*