;
Athirady Tamil News

ஊடக சுதந்திரத்துக்கான “வேட்கை” – அனைவருக்கும் அழைப்பு..!!

0

ஈழத்தின் மிகப் பெரும் ஊடகப் படுகொலையான உதயன் பத்திரிகை நிறுவனம் மீதான தாக்குதல் நடந்த மே 2 ஆம் திகதி, ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி சர்வதேச ஊடக சுதந்திர தினம் யாழ்ப்பாணத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.

(ஆக்க – அறிய – வெளிப்படுத்த – பகிர) என்ற தொனிப்பொருளில், ஊடக சுதந்திர தினம், எதிர்வரும் புதன்கிழமை காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் உதயன் நாளிதழின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.

ஈகைச்சுடரேற்றல், அகவணக்கம், வரவேற்புரை, சிறப்புரைகள் இடம்பெறவுள்ளன. மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஷரீன் சரூர், ஐ.நா தீர்மானத்தை நடைமுறைப்படுதல் உள்ளிட்ட நல்லிணக்க செயற்பாட்டில் அரசின் நடத்தை தமிழ், முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்பு என்ற தலைப்பில் சிறப்புரை வழங்குகிறார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக அரசறிவியல் விஞ்ஞானத் துறைத் தலைவர் கே.ரி.கணேசலிங்கம், தமிழ் தேசியமும் தமிழர் அரசியலும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அரச தலைவர் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன், தமிழ் ஊடகங்களின் செல்நெறியும் அவை பயணிக்க வேண்டிய திசையும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார்.

நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − fifteen =

*