;
Athirady Tamil News

அதிரடியில் வெளியிட்ட செய்தியை உண்மையில்லை என மறுக்கிறார் நகரசபை செயலாளர்..!!

0

வவுனியா கோவில்குளத்தில்அமைந்துள்ள இளங்கோ அடிகளாரின் தூபியடியில் நகர சபையின் செயலாளர் திரு தயாபரன் தலைமையில், இளங்கோ அடிகளாரின் நினைவுதின அனுஷ்டிப்பு. இன்றையதினம் (29 .04) நடைபெற்றது.

இந்நிகழ்வில் உரையாற்றிய வவுனியா நகர சபையின் செயலாளர் திரு தயாபரன் உரையாற்றுகையில், “வவுனியா நகரை அபிவிருத்தி செய்ய வேண்டுமென” வலியுறுத்தியதுடன், “அற்ப விடயங்களுக்காக ஆசைப்பட்டு இருப்பதையும் இழக்க கூடாது” என்றார்.

மேலும் அவர் “நகரசபை தவிசாளர் அவர்கள் பற்றி தமது உரையில் குறிப்பிடும் வேளை அவரை பற்றிய தவறான கருதொன்றினை குறிப்பிட்டார் என எமக்கு வந்த தவறான செய்தியை தொடர்ந்து நகரசபை தவிசாளர் கௌதமன் பற்றிய தவறான கருத்தொன்றினை நாம் பிரசிரித்து விட்டோம்.

இந்த செய்தி தொடர்பாக நகரசபை செயலாளர் எம்முடன் தொடர்புகொண்டு இந்த செய்தி உண்மைக்கு புறம்பானது என தமது மாற்று கருத்தினை தெரிவித்தார்.மேலும் தான் தன உரையில் இதுவரை வாகனம் கேட்காத ஒரே தலைவர் நகர சபையின் தவிசாளர் கௌதமன் அவர்கள் தான் என குறிப்பிட்டதாகவும் குறிப்பிட்டார்.

இந்த தவறான செய்தி தொடர்பாக எமக்கு செய்தி அனுப்பியவரிடம் தொடர்புகொண்டு கேட்ட பொழுது அவர் தாம் அவர் உரையாற்றுகையில் அதனை கேட்டுவிட்டு தவறாக விளங்கிக்கொண்டு வேறு விதமான அர்த்தத்தில் புரிந்துகொண்ட இப்படி செய்தியை தந்துவிட்டேன் என மன்னிப்பு கூறியுள்ளார்.

அதிரடி இணையம் எப்பொழுதும் உண்மைக்கு புறம்பான விடயங்களை பிரசுரிப்பதில்லை என்பதுடன் எமது நேர்மத்தன்மைக்கு களங்கம் விளைவிக்காத வகையில் வவுனியா நகர சபையின் தவிசாளர் கௌதமன் தொடர்பாக நாம் வெளியிட்ட செய்தி முற்றிலும் தவறான செய்தி என்பதுடன்.சம்மந்த பட்டவர்களிடம் நாம் எம் மன வருதத்தினையும் தெரிவித்து கொள்கின்றோம்.

அதிரடி நிர்வாகம்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − nine =

*