;
Athirady Tamil News

அமெரிக்கா தாக்குதலை நிறுத்தினால் அணு ஆயுதத்தை கைவிட தயார் – கிம்..!!

0

65 ஆண்டுகள் நிலவிய பகையை மறந்து வட, தென்கொரிய அதிபர்கள் சமீபத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சமே கொரிய பிராந்தியத்தில் அணு ஆயுத சோதனைகளை கைவிடுவது என்பதுதான்.

ஐ.நா. உள்பட பல்வேறு நாடுகளின் எதிர்ப்பையும் மீறி அணு ஆயுத சோதனைகளை நடத்தியது தான் வடகொரியா மீது அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் கோபத்திற்கு காரணமாக இருந்தது. எனவே அடுத்த மாதம் அணு சோதனை கூடங்களை வடகொரியா மூடும் என தென்கொரிய அதிபரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்நிலையில், எங்கள் மீது அமெரிக்கா தாக்குதலை நிறுத்தினால் நாங்கள் அணு ஆயுதத்தை கைவிட தயார் என வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, கிம் ஜாங் உன் கூறுகையில், வட, தென் கொரிய அதிபர்கள் சந்திப்பு வெற்றிகரமாக முடிந்துள்ளது. கொரியா மீது அமெரிக்கா தாக்குதலை நிறுத்தினால் நாங்கள் அணு ஆயுதங்களை கைவிட தயாராக உள்ளோம் என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × two =

*