;
Athirady Tamil News

ஓவியாவுக்கு ஆரவ் போட்ட ட்விட்… “நாங்க எல்லாம் முட்டாளா?“ கடுப்பில் ரசிகர்கள்..!!

0

இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஓவியாவுக்கு ஆரவ் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிக்பாஸ் வீட்டில் இருந்ததால் மிகவும் பிரபலமான நடிகை ஓவியா இன்று தனது 27வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஓவியா ஆர்மிக்காரர்கள் தங்களுக்கு பிடித்த நடிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது ஓவியா ஆரவை காதலித்தார். ஆரவ் தனது காதலை ஏற்க மறுத்த பிறகு ஓவியா மனமுடைந்த போதிலும் பின்னர் அதை மறந்துவிட்டார். அண்மை காலமாக அவர் ஆரவுடன் நெருங்கிப் பழகி வருகிறார்.

ஓவியாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை வாழ்த்தி ட்வீட் போட்டுள்ளார் ஆரவ். இதை பார்த்த ஓவியாவோ

நன்றி டியர் ஆரவ் என்று பதில் அளித்துள்ளார்.ஓவியா ஆரவை டியர் என்று கூறி ட்வீட்டியதை பார்த்த ஒருவர் ‘அப்ப நாங்க தான் முட்டாளா’.

சரி எப்படியோ நல்லா இருந்தால் சந்தோஷம் தான் என்று கூறியுள்ளார். அதற்கு ஓவியாவோ ரொம்ப சந்தோஷம் என்று கமெண்ட் போட்டுள்ளார்.ஆரவின் ட்விட்டர் பக்கத்தில் தன்னை பற்றி பேசியவர்களுக்கு பதில் அளித்துள்ளார் ஓவியா. இதன் மூலம் ஆரவும், ஓவியாவும் பிரியவில்லை ஒன்றாக தான் உள்ளனர் என்று ரசிகர்கள் உறுதி செய்துவிட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × two =

*