;
Athirady Tamil News

தெரியாமல் சிறுவன் செய்த தவறு: வஞ்சத்துடன் பழிவாங்கிய இரக்கமற்ற கர்ப்பிணி பெண்..!! (வீடியோ)

0

சீனாவில் கர்ப்பிணி பெண் ஒருவர் வேகமாக ஓடிவந்த சிறுவனுக்கு இடையில் காலை நீட்டியதால் அவன் காயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

சீனாவில் இருக்கும் பிரபல உணவகத்திற்கு கடந்த 19-ஆம் திகதி 4-வயது சிறுவன் ஒருவன் வந்த வேகத்தில் உணவகத்தின் ஸ்கிரீனை தள்ளுகிறான்.

அப்போது எதிர்பாரதவிதமாக ஸ்கிரீனுக்கு அருகே இருந்த கர்ப்பிணி பெண் மீது அது பட்டுவிட்டதால், ஆத்திரத்தில் அந்த பெண் சிறுவனை பழிவாங்க நினைத்துள்ளார்

எப்படியும் சிறுவன் மீண்டும் வருவான் என்று காத்துக் கொண்டிருந்த போது, அதே போன்று சிறுவனும் ஓடி வந்ததால் இவர் இடையில் காலை நீட்டி கீழே விழ வைத்தார்.

இதன் காரணமாக சிறுவனின் நெஞ்சுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

முதலில் தனது மகன் தெரியாமல் தான் விழுந்துவிட்டான் என்று பெற்றோர்கள் நினைத்த போது, மயக்கம் தெளிந்த சிறுவன் நடந்த சம்பவத்தை முழுமையாக கூறிய பின் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதன் பின் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களையும் பார்த்துள்ளனர். ஒரு பெண் செய்யும் செயலா என்று பெற்றோர் கேள்வி எழுப்பி குறித்த வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளதால், தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen + six =

*