;
Athirady Tamil News

ஒற்றை கேள்வி கேட்டதால் மருத்துவருக்கு நேர்ந்த பரிதாபம்..!!

0

சீனாவைச் சேர்ந்த மருத்துவர் நச்சுத்தன்மை வாய்ந்த மதுபானத்தை மருத்து எனக் கூறி விற்கப்படுவதாக தனது கட்டுரையில் குறிப்பிட்டதைத் தொடர்ந்து, 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்துள்ளார்.

சீனாவின் குவாங்ஸோவைச் சேர்ந்த மருத்துவர் டான் க்விண்டோங்(39). இவர் கடந்த டிசம்பர் மாதம், மெய்பியான் என்ற வலைதளத்தில் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார்.

அதில், ‘ஹாங்மாவோ மருத்துவ ஒயின்’ நச்சுத்தன்மை வாய்ந்தது. விளம்பரத்தில் கூறுவது போல் அது கடுமையான இதய நோய் மற்றும் வாத நோய்களை குணப்படுத்தாது என்று தனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த கட்டுரை சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதைத் தொடர்ந்து, வாடிக்கையாளர்கள் சிலர் அந்த மருத்துவ ஒயினை திருப்பிக் கொடுத்துவிட்டு, பணத்தை கேட்டிருக்கிறார்கள்.

அதன் பின்னர், ஹாங்மாவோ நிறுவனம் மருத்துவரின் மீது அவதூறு வழக்குத் தொடுத்தது. மேலும், அந்நிறுவனம் தங்களின் நிறுவனத்திற்கு களங்கம் ஏற்பட்டதால், சுமார் ஒன்றரைக் கோடி வரை நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகவும் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து ஜனவரி 10ஆம் திகதி, எந்தவித ஆராய்ச்சியும் செய்யாமல் மருத்துவரே இவ்வாறு ஒரு கட்டுரையை வெளியிட்டிருப்பதில் உள்நோக்கம் உள்ளது என நீதிமன்றம் தெரிவித்தது. அதன் பின்னர் மருத்துவர் டான் க்விண்டோங் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், மூன்று மாத சிறை தண்டனைக்கு பிறகு வெளியே வந்த டான் க்விண்டோங் இதுகுறித்து கூறுகையில்,

பாரம்பரிய சீன மருத்துவப்படி மருந்துகளை தயாரிப்பதாகவும், ஒரே மருந்து பல நோய்களைக் குணமாக்கும் என்று அதீதமாக கூறும்போது ஒரு மருத்துவனாக இயல்பாகவே கேள்வி எழுகிறது.

ஒரு கேள்வி கேட்டதற்கு நான் அனுபவித்த தண்டனை போதும். எனக்காக ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி. நான் மீண்டும் பேசினால் மறுபடியும் தண்டனை கிடைக்கலாம். சிறை தண்டனை மிக மோசமான அனுபவத்தை தந்திருக்கிறது.

ஒரு குற்றவாளி கூட இப்படி நடத்தப்பட்டிருக்க வாய்ப்பில்லை. மருந்து நிறுவனங்கள் நாம் நினைப்பதை விடவும் மிக அதிகமான செல்வாக்கைப் பெற்றிருக்கின்றன.

என்னை ஒரு Hero-ஆக பார்க்க வேண்டாம். மக்களே விழிப்புணர்வு பெற்றால்தான் இதற்கு தீர்வு’ என தெரிவித்துள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen + 10 =

*