;
Athirady Tamil News

ஜேர்மனியில் நூற்றுக்கணக்கான நோயாளிகளை கொன்ற சைக்கோ கொலைகாரன்..!!

0

ஜேர்மனியில் ஏற்கனவே இரண்டு பேரைக் கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நீல்ஸ் ஹொகேல் எனும் ஆண் செவிலியர் 100க்கணக்கான நோயாளிகளை கொன்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

நைல் எச் எல் என்று மட்டுமே அறியப்பட்ட இந்த ஆண் செவிலியர் தன்னை நாயகனாக காட்டிக் கொள்வதற்காக வடக்கு ஜெர்மனியில் உள்ள இரண்டு கிளினிக்குகளில் பல நோயாளிகளுக்கு கொடூரமான மருந்தை ஊசி மூலம் செலுத்தி மீண்டும் அவர்களை உயிர்பிழைக்க வைக்க முயற்சித்திருக்கிறார்.

வடக்கு ஜெர்மனியில் உள்ள ஓல்டன்பேர்க்கில் உள்ள ஒரு மருத்துவமனையில் 38 பேர் மற்றும் ஓல்டன்பர்க் அருகிலுள்ள டெல்மேன்ஹார்ட் நகரில் உள்ள 62 பேரும் கொல்லப்பட்டதற்கு நீல் ஹெச் எல் லை சந்தேகிக்க வைக்கும் சான்றுகள் இப்போது கிடைத்துள்ளன என்று ஓல்டன்பெர்க் பொலீசும் நகரின் பொது வழக்கறிஞர் அலுவலகமும் வியாழக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டன

இதில் சில கொலைகளை தான் செய்ததாக ஒப்புக் கொண்ட நீல்ஸ் ஹொகேல் ஆகஸ்ட் மாதம் செய்த கொலைகள் பற்றி நினைவு படுத்த முடியவில்லை என்கின்றனர். அதே ஆகஸ்டில் தான் 84 கொலைகள் நிகழ்ந்திருக்கலாம் என பொலீஸ் சந்தேகிக்கின்றனர். டாக்ஸிகாலஜி ரிப்போர்ட் வரும் சமயம் இதன் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது

10 ஆண்டுகளுக்கு முன் ஜேர்மன் தாதி ஒருவர் தனது நோயாளிகளின் நோய் குறித்து மனம் வருந்தி வயதான நோயாளிகள் 28 பேரைக்கொன்றது நினைவிருக்கலாம். அதில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இதே போல பிரிட்டனில், டாக்டர் டெத் அன்று அழைக்கப்பட்ட ஹரோல்ட் ஷிப்டன் 250 பேரைக் கொன்றதாக நம்பப்படுகிறது, அவர்களில் பெரும்பாலோர் முதியோரும் நடுத்தர வயதினரும் ஆன அவரது நோயாளிகள்.

இந்த வழக்கில் 2000 வது ஆண்டில் டாக்டர் ஷிப்டனுக்கு 15 முறை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 2004ம் ஆண்டில் அவர் சிறையிலேயே தற்கொலை செய்து இறந்தது குறிப்பிடத்தக்கது.

குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அதிகபட்ச தொடர் கொலைகளை செய்த இந்த “டெத்” டாக்டருக்குப் பின் அதிக கொலைகள் செய்ததாக நீல்ஸ் ஹொகேல் கருதப்படுவார் எனத் தெரியவருகிறது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen − 6 =

*