;
Athirady Tamil News

பிரித்தானியாவில் உடல் பருமனால் அவதியுறும் சிறார்கள்: எந்த பகுதியில் அதிகம்?..!!

0

பிரித்தானியாவில் குண்டு சிறார்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் தலைநகர் லண்டன் மற்றும் சவுத்வார்க்கில் உள்ள Camberwell Green உள்ளிட்ட பகுதிகளில் உடல் பருமன் கொண்ட சிறார்களின் எண்ணிக்கை அதிகம் என தெரிய வந்துள்ளது.

மட்டுமின்றி 10 மற்றும் 11 வயதுக்கு உட்பட்ட 33 விழுக்காடு சிறார்கள் உடல் பருமன் கொண்டவர்களாகவும், எஞ்சிய 51 விழுக்காடு சிறார்கள் அதிக உடல் எடை கொண்டவர்கள் எனவும் அரசு ஆவணங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

மேலும் கேம்பர்வெல் கிரீன் பகுதியில் குடியிருக்கும் 4 மற்றும் 5 வயது சிறார்களில் 18 விழுக்காட்டினர் உடல் பருமனாலும், 34 விழுகாடு சிறார்கள் அதிக உடல் எடை கொண்டவர்களாகவும் உள்ளனர்

இதனால் கேம்பர்வெல் கிரீன் பகுதியானது பிரித்தானியாவில் அதிக உடல் எடை மற்றும் உடல் பருமன் மிகுந்த பகுதியாக கருதப்படுகிறது.

ஒட்டு மொத்த பிரித்தானியாவில் 10 மற்றும் 11 வயது சிறார்களில் 20 விழுக்காட்டினர் உடல் பருமனால் அவதிப்படுபவர்கள். மட்டுமின்றி 4 மற்றும் 5 வயது சிறார்களில் 9 விழுக்காடு உடல் பருமன் கொண்டவர்கள்.

உடல் பருமனான சிறார்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக ரெட்கார் நகரில் உள்ள Grangetown, கிளீவ்லாந்து, தேம்ஸ்மேட் மூரிங்ஸ் மற்றும் கிரீன்விச் பகுதியில் உள்ள வுல்விச் ரிவர்சைடு ஆகிய 5 பகுதிகளை குறிப்பிடுகின்றனர். உடல் பருமன் மற்றும் அதிக உடல் எடைக்கு முக்கிய காரணமாக குறிப்பிடுவது பிரித்தானியர்களின் ஆரோக்கியமற்ற மற்றும் கட்டுப்பாடற்ற உணவு பழக்கங்கள் ஆகும் என குறிப்பிடப்படுகிறது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 3 =

*