;
Athirady Tamil News

சமரச பேச்சு வார்த்தை நடத்துவதற்கு தலீபான்களுக்கு மீண்டும் ஆப்கானிஸ்தான் அதிபர் அழைப்பு..!!

0

ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிற தலீபான் பயங்கரவாதிகளை நிபந்தனையற்ற, நேரடி பேச்சு வார்த்தைக்கு அந்த நாட்டின் அதிபர் அஷரப் கனி கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் அழைப்பு விடுத்தார். போர் நிறுத்தம் செய்யும் திட்டத்தையும், கைதிகளை விடுவிக்கும் திட்டத்தையும் அவர் முன்மொழிந்தார். அந்த நாட்டின் அரசியல் சட்டத்தை ஆராய்ந்து மாற்றி அமைக்கவும் அவர் சம்மதம் தெரிவித்தார். ஆனால் தலீபான்கள் பேச்சு வார்த்தைக்கு திரும்பாமல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், 1992-ம் ஆண்டு அங்கு கம்யூனிஸ்டுகள் ஆதரவுடன் இருந்த நஜிபுல்லா அரசை முஜாகிதீன்கள் வீழ்த்தியதின் 26-வது ஆண்டு வெற்றி தின விழாவில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷரப் கனி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், “வரலாற்றில் புனித போராளிகள் ஆழமான வேரினை கொண்டு உள்ளனர். இஸ்லாமியத்தில் நம்பிக்கை கொண்டனர். அதனால் நமது மக்கள் மிகப்பெரிய வெற்றியை அடைந்தனர்” என்று கூறினார்.

மேலும், “தலீபான்கள் சமரச பேச்சு வார்த்தை நடத்த முன்வர வேண்டும். நீங்கள் முஸ்லிம்கள், ஆப்கானிஸ்தானியர்கள் என்றால் பேச்சு வார்த்தைக்கான அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறினார். இந்த அழைப்பு குறித்து தலீபான்கள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. #tamilnews

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 5 =

*