;
Athirady Tamil News

வடமாகாண தொண்டராசிரியர்கள் இன்று கிளிநொச்சியில் சந்திப்பு.!!

0

வடமாகாண தொண்டராசிரியர்கள் இன்று கிளிநொச்சியில் சந்திப்பொன்றில் ஈடுபட்டனர். குறித்த சந்திப்பு இன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் இடம்பெற்றது. அண்மையில் இடம்பெற்ற தொண்டராசிரியர்களிற்கான நேர்முக தேர்வு தொடர்பிலும், குறித்த தேர்வுக்கு தகுதியான ஆசிரியர்கள் அழைக்கப்படாது விடுபட்டமை தொடர்பிலும் இன்று கலந்துரையாடப்பட்டதாக தொண்டராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

நீண்ட காலமாக எவ்வித ஊதியமும் இல்லாது தாம் கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபட்டதாக தெரிவிக்கும் இவர்கள், தம்மையும் நிரந்த நியமனத்திற்கு உள்வாங்குவதற்கான கபினட் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

வடக்கில் நீண்ட காலமாக தொண்டர் ஆசிரியர்களாக சேவையாற்றிவரும் அதிகமானோரில் குறிப்பிட்ட சிலருக்கே இவ்வாறு நேர்முக தேர்வுக்க அழைப்பு விடுக்கப்பட்டமை தொடர்பில் தாம் கல்வி அமைச்சருடன் கலந்துரையாடியாதாகவும், அதன்போது சில வாக்குறுதிகள் வழங்கப்பட்டதாகவும் அவர்கள் ஊடகங்களிற்கு தெரிவித்தனர். எனினும் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதவிடத்து போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர்கள் இதன்போது தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × four =

*