;
Athirady Tamil News

மூதூரில் வாகன விபத்து – இருவா் படுகாயம்..!! (படங்கள்)

0

மூதூர் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்னால் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து நேற்று இடம்பெற்றது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றது எனக் கூறப்பட்டது.

இதில் இரண்டு வாகனச் சாரதிகளும் படுகாயமுற்ற நிலையில் மூதூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 4 =

*