;
Athirady Tamil News

காபுல் நகரில் இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 25 பேர் பலி..!!

0

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலின் மையப்பகுதியான ஷாஷ் டரக் பகுதியில் ஐ.நா.சபை கிளை அலுவலகம் மற்றும் பல்வேறு வெளிநாட்டு தூதரகங்கள் உள்ளன.

இவ்வழியாக இன்று காலை மோட்டார் சைக்கிளில் வந்த தற்கொலைப்படை தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்ததில் 4 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதல் நடந்த சற்று நேரத்தில் பத்திரிகையாளரைப் போல் வந்த ஒருவன் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 21 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். இறந்தவர்களில் ஒருவர் பிரபல செய்தி நிறுவனமான ஏஜென்சி பிரான்ஸ் பிரஸ் நிறுவனத்தை சேர்ந்த புகைப்பட நிபுணர் என்பதும் உள்நாட்டை சேர்ந்த ஊடகவியலாளர்கள் இருவரும் இந்த தாக்குதலில் உயிரிழந்ததாகவும் தெரியவந்துள்ளது.

காயமடைந்த சுமார் 30 பேர் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 5 =

*