;
Athirady Tamil News

வெள்ளை மாளிகையில் டிரம்ப் – மாக்ரான் இணைந்து நட்ட மரக்கன்று ஒரே வாரத்தில் மாயம்..!!

0

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரான் கடந்த வாரம் அமெரிக்காவுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, வெள்ளை மாளிகை வளாகத்தில் மாக்ரான் மற்றும் டிரம்ப் இணைந்து ஓக் மரக்கன்று ஒன்றை நட்டனர். அப்போது, டிரம்ப் மனைவி மெலேனியா டிரம்ப் மற்றும் மாக்ரான் மனைவி ப்ரிக்கிடி ஆகியோர் உடனிருந்தனர்.

இந்நிலையில், இரு தலைவர்களும் இணைந்து நட்ட அந்த மரக்கன்று தற்போது மாயமாகியுள்ளது. இந்த செய்தி ஊடகங்களில் வெளியானதை அடுத்து, இது தொடர்பாக வெள்ளை மாளிகை விளக்கமளித்துள்ளது. மரச்செடியில் ஏராளமான ஒட்டுண்ணிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மற்ற செடிகளுக்கு அது பரவி விடக்கூடாது என்பதால் செடி பிடுங்கப்பட்டது,

செடி நடப்பட்ட இடம் தற்போது

விரைவில் அந்த செடி தனியாக நடப்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. முதலாம் உலகப்போரின் போது பிரான்ஸ் நாட்டின் பெல்லாவு உட் பகுதியில் சுமார் 2 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் பலியாகினர். அந்த இடத்தில் இருந்து ஓக் மரக்கன்று அமெரிக்கா கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − 9 =

*