;
Athirady Tamil News

த.தே.ம.முன்னணியின் தொழிலாளர் தினம்..!!

0

யாழ். நல்லூர் – கிட்டு பூங்கா வளாகத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தொழிலாளர் தின நிகழ்வு (செவ்வாய்க்கிழமை) பி.ப 3.00 மணியளவில் இடம்பெறவுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வாக, பொது மக்களும் தொழிலாளர்களும் கலந்துகொள்ளும் தொழிலாளர் தின ஊர்திப் பேரணியொன்று பருத்தித்துறை வீதியிலுள்ள சட்டநாதர் கோயிலில் ஆரம்பமாகி பருத்தித்துறை வீதி வழியாக கிட்டு பூங்காவை சென்றடைந்ததும் பொதுக்கூட்டம் ஆரம்பமாகும்.

இந்நிகழ்வில், இனவழிப்புக்கு ஐ.நா. பாதுகாப்புச் சபையூடாக விசாரணையை வலியுறுத்துதல், தமிழ் தேசமும் இறைமையும் அங்கீகரிக்கப்படுவதன் மூலம் அரசியல் விடுதலையை வென்றெடுத்தல், தமிழ் தேசத்து தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுத்தல், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டறிதல் மற்றும் இடம்பெயர்ந்த மக்களின் உடனடி மீள்குடியேற்றம் ஆகிய விடயங்கள் வலியுறுத்தப்பட இருக்கின்றன.

தொழிலாளர் தின நிகழ்வில் அனைத்து தமிழ் மக்களும் ஒற்றுமையாய் அணிதிரள தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × one =

*