;
Athirady Tamil News

ஆவா குழுவின் முக்கிய குற்றவாளிக்கு விளக்க மறியல்..!!

0

யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழுவின் முக்கிய குற்றவாளியை யாழ் காவல்துறையினர் நேற்று முன்தினம் இரவு கொக்குவில் பிரதேசத்தில் கைதுசெய்துள்ளனர். யாழ், காவல்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்தே இந்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த நபர், யாழ்ப்பாணத்தில் பலரை வாளால் வெட்டி படுகாயம் ஏற்படுத்தியவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நபரிடம் இருந்து ஆவா குழு பற்றிய முக்கிய பல தகவல்கள் கிடைத்துள்ளஎனவும் இதனடிப்படையில் மேலும் சிலரை கைதுசெய்ய விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் யாழ் பதில் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine + 9 =

*