;
Athirady Tamil News

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 வாலிபர்கள் பலி..!!

0

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் ஓல்ட் டவுன் பகுதியில் மூன்று வாலிபர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் அந்த வாலிபர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட தொடங்கினர். இந்த தாக்குதலில் 3 வாலிபர்களும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் வாலிபர்கள் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், அவர்கள் ஆசிப் அகமது ஷேக், ஹசீப் அகமது கான், மொகமது அகர் என தெரிய வந்தது. இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten − three =

*