;
Athirady Tamil News

மிக கோரமாக மரணமடைந்த மொடல் அழகி: பூச்சிகளுக்கு இரையான கொடுமை..!! (வீடியோ)

0

இரண்டாம் உலகப் போரின்போது தனது நாட்டிற்காக கடமையாற்றிய பிரபல மொடல் ஒருவர் தனது வாழ்வின் இறுதிக் காலத்தில் கவனிப்பார் யாருமின்றி சிரங்கால் பாதிக்கப்பட்டு நுண் பூச்சிகளுக்கு இரையாகி இறந்திருக்கிறார்.

Scabies என்று அழைக்கப்படும் சிரங்கு நோய் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள மற்றும் வளரும் நாடுகளில் அதிகம் காணப்படும் என்ற நிலையில் அமெரிக்கா, ஜேர்மனி போன்ற நாடுகளும் அதற்கு விதி விலக்கல்ல என்பதை தெரியபடுத்தும் செய்திகள் அவ்வப்போது வந்து கொண்டுதான் இருக்கின்றன.

அமெரிக்க முன்னாள் மொடலான Rebecca Zeni தனது முதுமைக்காலத்தில் Dementia பிரச்சினையால் அவதியுற்று ஜார்ஜியாவிலுள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார்

அங்கு சிகிச்சை பெற்றுவரும்போது அங்குள்ள பலருக்கும் சிரங்கு நோய் ஏற்பட்டிருக்கிறது.

Rebeccaவுக்கு அது தொற்றிக்கொண்டது. மருத்துவமனை நிர்வாகம் சரிவர கவனிக்காததால் Rebeccaக்கு சிரங்கு உடல் முழுவதும் பரவி அந்நோயை உண்டுபண்ணும் நுண் பூச்சிகளால் அவர் கொல்லப்பட்டிருக்கிறார்.

அவரது கைகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதால் அவரது கையைத் தொட வேண்டாம் என்றும் தொட்டால் ஒரு வேளை கை கழன்று விழுந்து விடும் என்றும் நர்ஸ்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக தகவல் ஒன்று கிடைத்துள்ளது. தற்போது மருத்துவமனை நிர்வாகம் மீது Rebeccaவின் குடும்பத்தினர் வழக்கு பதிந்துள்ளனர்.

Rebeccaவின் உடலை பரிசோதித்த தடயவியல் நோய் நிபுணர் ஒருவர் தன் வாழ் நாளில் இதுபோன்ற கோர மரணத்தைக் கண்டதில்லை என்றும் அவர் இறக்கும்போது மிகுந்த வேதனையுடனேயே இறந்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் Rebeccaவை இந்த நிலையில் விட்டுவிட்டு அவரது குடும்பத்தார் எங்கு சென்றார்கள், ஏன் அவர்கள் அவரது நோயைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்னும் கேள்விகளை ஊடகங்கள் எழுப்பியுள்ளன

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 + nineteen =

*