;
Athirady Tamil News

பிரித்தானியாவுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் ரகசிய உறவு: 27 ஆண்டுகளுக்குப்பின் வெளியான தகவல்..!!

0

நடுநிலை நாடு என கருதப்பட்ட சுவிட்சர்லாந்து, நேட்டோ உறுப்பு நாடான பிரித்தானியாவுடன் ராணுவ ரீதியிலான உறவு வைத்திருந்த ரகசிய தகவல் 27 ஆண்டுகளுக்குப்பின் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான பனிப்போரில் வெளி உலகுக்கு தன்னை ஒரு நடுநிலையாளராகக் காட்டிக் கொண்ட சுவிட்சர்லாந்து, சோவியத் ரஷ்யா ஊடுருவினால் தாக்குவதற்காக 400 ராணுவ வீரர்களைக்கொண்ட வலிமையான P-26 என்னும் ரகசிய ராணுவப் பிரிவு ஒன்றை அமைத்திருந்தது பலருக்கு, ஏன் சுவிட்சர்லாந்து நாடாளுமன்றத்திற்கே தெரியாது.

நாட்டை ஆளும் ஏழு உறுப்பினர்களைக் கொண்ட அரசாங்கத்திற்கே இந்த ரகசிய அமைப்பைக்குறித்த சில தகவல்கள் தான் கொடுக்கப்பட்டிருந்தன.

தற்போது சுவிட்சர்லாந்து நீதிபதியாகிய Pierre Cornu என்பவர் எழுதிய அறிக்கை ஒன்று வெளியானதால்தான் இந்த விடயங்கள் வெளி உலகுக்கு தெரிய வந்துள்ளன. என்றாலும் அறிக்கையில் பாதிதான் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ஒரு காலத்தில் P-26 என்னும் ரகசிய ராணுவப் பிரிவு பிரித்தானிய உளவு அமைப்புகளான MI5 மற்றும் MI6உடன் நெருங்கிய தொடர்பிலிருந்ததாக வதந்திகள் வருவதுண்டு, அதை தற்போது இந்த அறிக்கை உறுதி செய்துள்ளது.

P-26 போலி அடையாளத்துடன் தொடர்ந்து பிரித்தானியாவுக்கு சென்று பேரழிவு யுத்த முறைகள் உட்பட கொரில்லா யுத்த முறைகளில் பயிற்சி எடுத்துக் கொண்டது.

முக்கியமாக எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை அழிப்பது மற்றும் வேகமாக சென்றுகொண்டிருக்கும் ஹெலிகொப்டர்களிலிருந்து நீர் மட்டத்துக்கு மேல் வரும் நீர் மூழ்கிக் கப்பல்கள் மீது குதிப்பது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டன

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen + 5 =

*