;
Athirady Tamil News

பொதுமக்களுக்கு எச்சரிக்கை: கனடாவில் கோடாரியுடன் சுற்றும் மர்ம நபரால் அச்சம்..!!

0

கனடாவின் டொராண்டோ நகரில் பொதுமக்கள் மீது கோடாரியால் தாக்கி விட்டு தலைமறைவான மர்ம நபரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

குறித்த நபர் தொடர்பில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவும் பொலிஸ் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டொராண்டோவின் மார்க்கம் சாலையில் குறித்த மர்ம நபர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், அதில் ஒருவர் படுகாயமடைந்ததாகவும் பொலிசாருக்கு தகவல் வந்துள்ளது.

இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார் காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்

தாக்குதல் நடத்திவிட்டு மாயமான மர்ம நபரை தேடி வருவதாகவும், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கோடாரியை கைப்பற்றியதாகவும் ஆனால் குறித்த நபரிடம் ஆயுதம் இருக்கலாம் எனவும் பொலிசார் எச்சரிக்கை தகவல் வெளியிட்டுள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவமானது கைகலப்பால் ஏற்பட்டதாக இருக்கலாம் எனவும் தீவிரவாத தொடர்பு இருப்பதற்கான சாத்தியம் இல்லை எனவும் டொராண்டோ பொலிசார் தெரிவித்துள்ளனர்.

டொராண்டோவில் பரபரப்பான சாலையில் வாடகை வாகனத்தை பாதசாரிகள் மீது மோதவிட்டு தாக்குதல் நடத்தி 10 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து இந்த கோடாரி தாக்குதல் சம்பவம் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 − twelve =

*