;
Athirady Tamil News

உங்களுக்கு இனி வேலை இல்லை: ஊழியர்களுக்கு SMS அனுப்பிய முதலாளி..!!

0

பிரான்ஸ் நாட்டில் செக்யூரிட்டி நிறுவன உரிமையாளர் ஒருவர், தொழில் நட்டமடைந்ததாகக் கூறி தன்னிடம் பணியாற்றிய 430 பணியாளர்களுக்கு SMS மூலம் வேலை நீக்கம் செய்யப்பட்டதை தெரியப்படுத்திய சம்பவம் நடந்துள்ளது

மோசமான முதலாளிகளுக்கான போட்டி வைத்தால் இந்த நிறுவன உரிமையாளர்தான் முதல் பரிசு பெறுவார் என பத்திரிகைகள் அவரை கிண்டலடித்துள்ளன.

முன்பே மார்ச் மாத சம்பளம் வழங்கப்படாததைக் குறித்து கோபத்திலிருந்த பணியாளர்கள் 430 பேருக்கு பாரீஸில் இயங்கிவரும் அலுவலகத்தின் தலைமை செயல் அதிகாரியிடமிருந்து அவர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டதாக SMS வந்தது.

அந்த SMSஇல் தனது தொழில் நட்டமடைந்துள்ளதாகவும் அதனால் அவர்களுக்கு இனி வேலை இல்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

“குறைந்த பட்சம் ஒரு ரெஜிஸ்டர் தபாலாவது அனுப்பியிருக்கக்கூடாதா, SMS அனுப்பியிருக்கிறாரே” என பணியாளர் ஒருவர் ஆதங்கப்பட்டார்.

அந்த நிறுவன உரிமையாளரின் செயல் அலட்சியமானதாக இருந்தாலும் பிரான்ஸ் பணியாளர் சட்டப்படி அவர் செய்தது சட்டவிரோதம் அல்ல.

ஒரு நிறுவன உரிமையாளர் தனது பணியாளர் ஒருவரை வேலையை விட்டு நீக்க வேண்டுமானால் அவர் அதை ஒரு ரெஜிஸ்டர் தபால் மூலம் தெரிவிக்க வேண்டும் (அஜ்னாலட்ஜ்மெண்ட் உடன்) என்று சட்டம் கூறினாலும், இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் ஆன்லைன் மூலம் தெரிவித்தால் ஏற்றுக்கொள்ளப்படத்தக்கதே.

ஆனால் 2017 ஆம் ஆண்டு நிறுவனம் லாபத்தில் இயங்கிய நிலையில் அதன் உரிமையாளர் இவ்வாறு செய்துள்ளது அதன் பணியாளர்களை பெருங்கோபத்திற்குள்ளாக்கியுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 2 =

*