;
Athirady Tamil News

ஊக்கத்தொகையுடன் சுவிஸ் கிராமத்தில் குடியேறும் முதல் குடும்பம்..!!

0

சுவிட்சர்லாந்தின் ஆர்காவ் மாகாணத்தில் உள்ள குடும்பம் ஒன்று பெருந்தொகையை பெற்றுக் கொண்டு Albinen கிராமத்தில் குடியேற வாய்ப்பு பெற்றுள்ளது.இரண்டு குழந்தைகளை கொண்ட குறித்த குடும்பத்திற்கு சுமார் 70,000 பிராங்க் நிதி உதவி வழங்கப்படும்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் குறித்த குடும்பமானது வலைஸ் மாகாணத்தில் உள்ள குட்டி கிராமமான Albinen-ல் குடியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு வலைஸ் மாகாணத்தில் உள்ள மலை கிராமமான Albinen உலக அளவில் தலைப்பு செய்தியானது

குறித்த குட்டி கிராமத்தில் குடியேறும் 4 பேர் கொண்ட குடும்பத்தினருக்கு 70,000 பிராங்க் நிதி உதவி வழங்கப்படும் என்ற அறிவிப்பை கிராம நிர்வாகம் அறிவித்தது.

அறிவிப்பு வெளியான சில தினங்களில் உலகமெங்கிலும் இருந்து விசாரிப்புகள் குவிந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம நிர்வாகிகள், மறுப்பு தெரிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.பின்னர், குறித்த கிராமத்தில் குடியேற சில கடுமையான நிபந்தனைகள் இருப்பதாக தகவல் வெளியிட்டனர்.

அதில், தெரிவாகும் குடும்பம் 45 வயதுக்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும், குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாவது குறித்த கிராமத்தில் குடியிருக்க வேண்டும், சுமார் 200,000 பிராங்க் தொகைக்கு வஸ்துக்கள் வாங்கவோ கட்டிடம் எழுப்பவோ வேண்டும், கண்டிப்பாக நிரந்தர குடியிருப்பாக அதை பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் குவிந்த பல்வேறு விண்ணப்பங்களில் இருந்து 5 முதல் 10 குடும்பங்கள் குறித்த கிராமத்தில் குடியேற தகுதி பெற்றுள்ளதாக நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

தற்போது எதிர்வரும் செப்டம்பரில் முதல் குடும்பம் குறித்த கிராமத்தில் குடியேற உள்ளது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten − 8 =

*