;
Athirady Tamil News

நோயாளிகளை விஷ ஊசியால் கொல்லும் மர்ம நர்ஸ்: வெளியான அதிர்ச்சி தகவல்..!! (வீடியோ)

0

ரஷ்யாவில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் பெண்களை குறிவைத்து நர்ஸ் ஒருவர் நூதன தாக்குதல் நடத்தி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதில் 3 பெண்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 3 பெண்கள் உருச்சிதைந்த நிலையில் மிகவும் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த பெண்கள் அனைவரும் தடைசெய்யப்பட்ட மருந்து அல்லது ரசாயன கலவையைவலுக்கட்டாயமாக உடலில் செலுத்தப்பட்டதால் பாதிப்புக்கு உள்ளானதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதேபோன்று இன்னொரு மருத்துவமனையில் மார்பக அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்

மேலும் மூக்கை அழகு படுத்தும் அறுவை சிகிச்சை செய்து கொண்ட 29 வயதான மொடல் ஒருவர் கோமா நிலைக்கு சென்றுள்ளார்.

மட்டுமின்றி இந்த மாத துவக்கத்தில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் மார்பக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட 41 வயதான கனேடிய பெண்மணி உயிரிழந்துள்ளார்.

வரிசையாக இதுபோன்ற உயிரிழப்பு சம்பவங்கள் வெளியான நிலையில், விசாரணை மேற்கொண்ட புலனாய்வு அதிகாரிகள்,குறிப்பிட்ட ஒரு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்ட பெண்கள் மட்டும் உயிரிழப்பதை கண்டுபிடித்துள்ளனர்

அங்குள்ள நர்ஸ் ஒருவரே சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நோயாளிகளை விஷ ஊசியால் கொலை செய்வதும், தடை செய்யப்பட்ட ரசாயன கலவைகளை பயன்படுத்துவதும் தெரிய வந்தது.

மேலும் குறித்த நர்ஸ் மன நலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் எனவும், அதனாலையே அப்பாவி மக்கள் மீது இவ்வாறான கொடூர தாக்குதலை நடத்துவதாகவும் விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது மாயமாகியுள்ள குறித்த செவிலியரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாஸ்கோ பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மட்டுமின்றி, இதுபோன்ற வேறொரு வழக்கு தொடர்பில் மருத்துவர்கள் இருவரை கைது செய்துள்ள பொலிசார், நீதிமன்ற விசாரணைக்கு பின்னர் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் 3 ஆண்டுகள் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள தடையும் பெற்றுத் தந்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × four =

*