;
Athirady Tamil News

பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்ட Dublin ரயில் நிலையம்..!!

0

அயர்லாந்திலுள்ள டப்ளின் நகரின் Connolly ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்குரிய பொருள் ஒன்று கண்டெடுக்கப்பட்டதால் ரயில் நிலையம் மூடப்பட்டது.

ரயில் பாதையில் சந்தேகத்திற்குரிய பொருள் ஒன்று கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.இதனால் ரயில் நிலையம் மூடப்பட்டதோடு பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.கண்டெடுக்கப்பட்ட பொருளின் தன்மை சரியாக தெரியாவிட்டாலும், அது தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ஏதோ ஒரு வெடிபொருளாகவோ அல்லது டைனமைட் ஆகவோ இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

பணியாளர்கள் அருகிலுள்ள ஷெட்டை சுத்தம் செய்து கொண்டிருக்கும்போது அந்தப்பொருளைக் கண்டதாகக் கூறப்படுகிறது. குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் அல்லது ராணுவம் அந்தப் பொருளை சோதித்து முடிக்கும்வரையிலும் ரயில் நிலையம் மூடப்பட்டிருக்கும் என்று ரயில் நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.

ரயில் நிலையத்திற்கு வரும் மற்றும் இரயில் நிலையத்திலிருந்து புறப்படும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

டப்ளினுக்கு வரும் ரயில்கள் அருகாமையிலுள்ள ரயில் நிலையங்களில் நிறுத்தப்படுவதோடு அங்கிருந்து சாலை போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven + 13 =

*