;
Athirady Tamil News

வெள்ள அபாய எச்சரிக்கையில் பிரான்ஸின் வடமேற்கு பகுதிகள்..!!

0

பிரான்ஸ் நாட்டின் வடமேற்கு பகுதிகளில் கடும் மழை மற்றும் வெள்ளம் ஏற்படும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸின் தேசிய வானிலை அறிக்கை மையமான Meteo France, பிரான்ஸின் வடமேற்கு பகுதியில் உள்ள 6 துறைகள் வெள்ள அபாய எச்சரிக்கை வளையத்தில் உள்ளதாக அறிவித்துள்ளது.

Calvados, Eure, Seine-Maritime, Somme, Pas-de-Calais, Nord ஆகிய துறைகளே கடுமையான மழைப்பொழிவு மற்றும் வெள்ளம் ஆகியவற்றால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்க்கப்படும் ஒட்டுமொத்த மழைப்பொழிவு 40 மில்லி மீட்டர் என்றாலும், உள்ளூரில் 60 மில்லி மீட்டர் என்ற அளவில் இருக்கும். அதன் மூலம் வெள்ளப்பெருக்கு ஏற்பட வழிவகுக்கும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

மேலும், Hauts-de-France பகுதியில் வலிமையான காற்றானது 80 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், 100 கிலோ மீட்டர் வேகத்தில் கூட காற்று வீச வாய்ப்புள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 5 =

*