;
Athirady Tamil News

எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம் – பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்..!!

0

மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக பிரதமர் தலைமையில் அனைத்து முதல்-மந்திரிகளை கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த கமிட்டி கூட்டம் நாளை (புதன்கிழமை) டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்ல உள்ளார். நாளை (2-ந் தேதி) காலை 6 மணிக்கு சென்னை விமானநிலையத்தில் இருந்து அவர் டெல்லி செல்கிறார். அங்கு மாலை 5 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார்.

2-ந் தேதி இரவு டெல்லியில் தங்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 3-ந் தேதி காலை 6 மணிக்கு டெல்லி விமானநிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்னை வந்தடைகிறார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கச் செல்லும் அவர், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து காவிரி விவகாரம் குறித்து பேச வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதுபோல் தமிழகத்தின் தேவைகளை மனுவாக அளிக்கவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 − 2 =

*